Tuesday, January 30, 2007

பரமேஸ்வரியை விடுதலை செய்யுங்கள்

அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு


அதிமேதகு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு


பரமேஸ்வரியை விடுதலை செய்யுங்கள்


பயங்கரவாத புலயனாய்வு பிரிவினரால் கடந்த 60 நாட்களாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மௌபிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரியை (23) உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருவதற்கான பிரச்சாரத்தின் சார்பாக நான் அல்லது எனது நிறுவனம் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமும் சுதந்திர ஊடகவியலாளர் சம்மேளனமும் இணைந்து ஆரம்பித்துள்ள மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சாரத்தினை நாம் ஆதரிக்கின்றோம்.
பரமேஸ்வரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கடந்த வருடம் 2006 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவருக்கெதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.இதுவரை அவரை சட்டத்தரணிகளுக்கோ அவரது ஆசிரியருக்கோ ஊடக நிறுவனங்களுக்கோ அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
23 ஆம் திகதி ஜனவரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மேலும் 30 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதில் பயங்கரவாத பிரிவினர் வெற்றி கண்டுள்ளனர்.இது மிகவும் வெட்கக் கேடான நிலைமை.ஒரு பெண் பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர் தடுப்பு காவலில் வாடுவதை உங்களுடைய அரசாங்கம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த பயங்கரமான சம்பவமானது ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கிறது.
தமிழ் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களை அறிக்கையிடுவது தொடர்பில் பரமேஸ்வரி மிகவும் அறியப்பட்ட ஒருவர்.கொழும்பில் காணமால் போனவர்கள் பற்றியும் அவர் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார்.அவரின் நடுநிலைமையான ஊடகவியல் மற்றும் அவருக்கெதிராக ஆதாரமற்ற வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமானது மீண்டுமொரு முறை இந்த அவசரகால ஒழுங்கு முறைகள் (பயங்கரவாத தடை மற்றும் தடுப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்) அவை ஊடகத்தை அடக்குவதற்கும் சுதந்திரமான குரல்களை நசுக்குவதற்கும் து~;பிரயோகப்படுத்தப்படுவதாக தனது கவலைகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் அவரை எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்த தவறிய நிலைமையிலும்; அவரை விடுதலை செய்ய அரசாங்கம் தலையிடுமாறு அரசாங்கத்தை சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் பெறுமதிகளை அரசாங்கம் உணர்ந்து கொள்வதாக காட்டுவதற்கும் பரமேஸ்வரியை உடனடியாக விடுதலை செய்வதற்கும் இது பொறுத்தமான நேரம்.
உண்மையுள்ள.


ஜனாதிபதி அலுவலகம் தொலைநகல் : 0112424840 , 0112333717


  • பிரதம மந்திரி அலுவலகம் தொலை நகல் : 0112575454

Tuesday, January 23, 2007

ஊடகங்களையும் ஊடகவியலாளர்களையும் பாதுகாப்பதற்கு கொழும்பு கோட்டையில் கூடினர் ஊடகவியலாளர்கள்






கொழும்பிலிருந்து துஷான்
படப்பிடிப்பு:உவிந்து
ஊடக சுதந்திரம் மற்றும் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு


ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் எதிராக விடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களும் அழுத்;தங்களும் மற்றும் தாக்குதல்களும் மீண்டும் அண்மைக்காலம் முதல் கடுமையாக அதிகரித்துச் செல்கின்றதனை தெளிவாக காணக்கூடிதாயுள்ளது.இதிலுள்ள மிகவும் துரதி~;டவசமான சம்பவமானது இவ் எந்தவொரு அச்சுறுத்தலுக்கும் அழுத்தத்திற்கும் மற்றும் தாக்குதலுக்கும் அல்லது கொலைகளுக்கும் காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டியதை உரிய அதிகாரிகள் மூலம் தொடர்ச்சியாக தவிர்த்துக் கொண்டு செல்வதாகும்.காரணமானவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பதிலாக தற்பொழுது மேற்கொள்ளப்பட்டுக்கொண்டிருப்பது ஆபத்திற்குள்ளாகியுள்ள ஊடகவியலாளர்களுக்கும் ஊடக நிறுவனங்களுக்கும் எதிராக போலி குற்றச்சாட்டுக்களை முன்வைத்துக் கொண்டு அவர்களுக்கு எதிரான செயற்பாடுகளை நியாயப்படுத்தல் மற்றும் அவர்களுடைய நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.இடம்பெற்ற சம்பவங்களே கீழே குறிப்பிடப்படுகின்றன.

2006 2007 ஆம் வருடத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் கொலைசெய்யப்பட்டுள்ள ஊடகப்பணியாளர்கள் 06 ஆகும்.ஒரு கடத்தல்
ஊடகவியலாளர் சம்பத் லக்மால்
ஊடகவியலாளர் சுகிர்தராஜன்
யாழ்ப்பாணத்தில் ஊடகப் பணியாளர்கள் 06 பேர்

ஊடகவியலாளர் நடராஜா குருபரன் கடத்தப்பட்டு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

கடந்த குறுகிய காலத்திற்குள் இரு ஊடகவியலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மௌனசாமி பரமேஸ்வரி – மௌபிம (எந்தவொரு குற்றச்சாட்டினையும் முன்வைக்காது 60 நாட்களுக்கு மேலாக கைது செய்து தடுத்து வைத்துக்கொண்டுள்ளதுடன் அவரின் நலன்களையும் துன்பங்களையும் விசாரிப்பதற்கு ஊடக அமைப்புக்கள் மூலம் விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளுக்கும் இடமளிக்கவில்லை)

குமாரவேல் கஜன் - தினக்குரல் (ஒப்பு நோக்காளர்.கடந்த 12 நாட்களாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்)

ஐவர் தாக்குதலுக்கிலக்காகியுள்ளனர்

தெரண தொலைக்காட்சியின் சாரங்க சுயாதீன தொலைக்காட்சின் சுதர்மன்
லங்கா ஈ நிவுஸின் அஜித் ஹரய ஆசிரியர் கொத்திகொட
சண்டே லீடரின் அசோக்க

ஏழு நபர்களுக்கு மரண அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டுள்ளது

பந்துல பத்மகுமார லசந்த விகரமதுங்க
விக்டர் ஐவர் சுனந்த தேசப்பிரிய
ஸ்ரீ ரங்கா ருவன் பர்டினன்ட்ஸ்
சந்தருவன் சேனாதீர

ரோஹித பா~ன ( உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
அநுருத்த லொக்குஹபுஆராச்சி (உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)
ராஜ் நிமல் (உயிர் அச்சுறுத்தல் காரணமாக நாட்டை விட்டு வெளியேற்றம்)

அதிகளவான ஊடகவியலாளர்களுக்கும் பல ஊடக நிறுவனங்களுக்கும் பல்வேறு அச்சுறுத்தல்கள் மற்றும் துன்புறுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


• மௌபிம மற்றும் சண்டே லீடர் பத்திரிகைகளுக்கு எதிரான இடையூறுகள்
• லங்கா ஈ நியூஸ் இணையத்தளத்திற்கு எதிராக அச்சுறுத்தல் விடுத்தல்
• யாழ்ப்பாண பத்திரிகைகளுக்கு அச்சுத்தாள்கள் தடைசெய்யப்பட்டுள்ளமை
• லங்கா பத்திரிகை அச்சகத்திற்கு தீவைப்பு
• கிழக்கு மாகாணத்தில் வீரகேசரி,தினக்குரல் மற்றும் சுடரொளி பத்திரிகைகள் விநியோகத்திற்கு எதிராக ஆயுதக்குழுக்கல் மூலம் விடுக்கப்பட்டுள்ள தடைகள்.
• சண்டே லீடரின் ரங்க ,யோதசிங்ஹ மற்றும் சிலுமினவின் பிரசன்ன ஆகியோர் குற்றப்புலனாய்வு பொலிசார் மூலம் புதிய சட்ட திட்டங்களின் கீழ் விசாரணை செய்துள்ளதுடன் செய்தி மூலங்களை வெளியிடுமாறு வற்புறுத்தல்.
• யாழ் ஊடகங்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள சட்டபூர்வமான சட்டபூர்வமற்ற தடைகள்
• பொலன்னறுவை ராஜவீரசிங்ஹ பகிரங்க கூட்டமொன்றை ஆவணம் செய்துகொண்டிருக்கும் பொழுது வெளியேற்றியமை.


இலங்கை உழைக்கும் பத்திரிகையாளர் சங்கம்,ஊடக ஊழியர் தொழிற்சங்க சம்மேளனம்,இலங்கை தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியம்,ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம்,சுதந்திர ஊடக இயக்கம் ஆகிய ஐந்து ஊடக அமைப்புக்களே இவ் ஆர்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருந்திருந்தன.

பெரும்பான்மையின பேரினவாதிகளின் அடக்குமுறைக்குள்ளாகும் மலையக பெருந்தோட்டங்கள்

கிரிமெட்டியிலிருந்து ராஜசேகர்

இலங்கையில் அண்மைக்காலம் முதல் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களால் வடகிழக்கில் வாழும் தமிழ் மக்களைப் போன்றே அவற்றுக்கு வெளியில் வாழ்ந்து வரும் தமிழ் மக்கள்; பெரும் இனவாத அடக்கு முறைக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

இதன் ஒரு வெளிப்பாடாக அண்மையில் கொண்ணடாடப்பட்ட பொங்கள் விழா தினத்திற்கு இரு தினங்களுக்கு முன்னர் பிரதேசத்தில் சட்டவிரோத மது (கசிப்பு) விற்பனையை மேற்கொள்ளும் சிங்கள நபரொருவரை தமிழ் இளைஞர்கள் வீடு புகுந்து தாக்கியுள்ளனர்.இதன்; பின்னர் இச்சம்பவம் சிங்கள தமிழ் கலவரமாக உருவெடுக்கும் வகையில் சிங்கள காடையர் கும்பலொன்று பொங்கள் தினத்தன்று தமிழ் இளைஞர்களை தாக்குவதற்கு முற்பட்டமை அவர்களின் இனவாத போக்கினை நன்கு எடுத்துக்காட்டுகின்றது.

இவ்வாறான சம்பவங்கள் தொடர்ந்து சிங்கள காடையர் கும்பலுக்கு இடமளிக்காதிருப்பதற்கு தமிழ் அரசியல் தலைவர்கள் காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ளல் வேண்டும்.

Thursday, January 11, 2007

மலையகத்தை யுத்த பீதிக்குள்ளாக்கும் இனாவத ஊடகங்களின் ஊடகப்பிரயோகம்

எஸ்.நயனகணேசன்

நாட்டின் இனப்பிரச்சினை இன்று உக்கிரமடைந்து செல்லும் இந்நிலையில் மலையகத்தில் வாழும் மக்களும் புலிகள் என்று அவர்கள் மீது முத்திரை குத்துவதற்கு பேரினவாதிகளும் இனவாத ஊடகங்களும் பிரயத்தனம் செய்து வருகின்றமை எதிர்காலத்தில் அம்மக்களின் நிம்மதியான வாழ்க்கையை சீர்குலைக்கும் ஓர் இழிசெயலாகும்.

ஜே.வி.பி கட்சியின் கொள்கைகளை பிரதிநிதித்துவப்படுத்தி வாராந்தம் பிரசுரமாகும் 'லங்கா" என்ற சிங்கள பத்திரிகை, கடந்த 07 ஆம் திகதி வெளியான தமது வார இதழில் 'புனித மலர்" என்ற பெயருடன் 10 ஆம் பக்கத்தில் பிரசுரிக்கப்பட்டுள்ள கட்டுரையில் 'பெருந்தோட்டங்களையும் புலிகளுக்கு தாரை வார்த்து கொடுக்கும் முயற்சியொன்று' என்ற தலைப்புடன் பெருந்தோட்டங்களில் வாழ்பவர்களும் புலி சந்தேகநபர்களென்ற புரளியை கிளப்பி விட்டுள்ளது.

அக்கட்டுரையில் மேலும் குறிப்பிடப்பட்டள்ளது, கொழும்பு நகர் உட்பட நாட்டின் எந்தவொரு பிரதேசத்திற்கும் சுதந்திரமாக சென்று வருவதற்குள்ள தன்மை மற்றும் சிங்கள மொழியை சரளமாக பிரயோகிப்பதற்குள்ள திறமை காரணமாக புலனாய்வு நடவடிக்கைகளுக்காக பெருந்தோட்ட இளைஞர் யுவதிகளை ஈடுபடுத்துவதற்கு புலிகளின் புலனாய்வு பிரிவு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக பாதுகாப்பு தரப்பிற்கு தகவல் கிடைத்துள்ளது. ஊவா மற்றும் மத்திய மாகாணங்கள் இரண்டும் தோட்டங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இரு மாகாணங்கள் என்பதனால் இங்கு பாரியளவில் தோட்டத்தொழிலாளர்கள் வாழ்கின்றனர்.

நீண்டகாலமாக அமைதியான முறையில் தோட்டங்களில் தமது செயற்பாடுகளை மேற்கொண்ட புலிகள் இயக்கம் தற்பொழுது அவர்களின் செயற்பாடுகளை பாரியளவில் மேற்கொள்வதற்கு தோட்ட இளைஞர்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட முன்னாள் வெளிவிவகார அமைச்சர் லக்~;மன் கதிர்காமரின் புல்லர்ஸ் ஒழுங்கையில் அமைந்திருந்த வீட்டை வீடியோ படம் பிடித்துக்கொண்டிக்கையில் கைது செய்யப்பட்ட பசறை கோணாகலை தோட்டத்தைச் சேர்ந்த துவில் இத்தியம் மற்றும் பசறை வீதியைச் சேர்ந்த ஜகனம் என்ற இருவரும் ஊவாவை சேர்ந்தவர்களாகும்.

மேலும் முன்னாள் ஜனாதிபதி மூலம் ஊவா பல்கலைக்கழகத்திற்கு அடிக்கல் நாட்டுவதற்கு முன்னர் பதுளை திக்வெல்ல தோட்டத்தைச் சேர்ந்த எட்டு புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்தனர். அதேவேளை பதுளை ரிதீபான தோட்டத்தில் வைத்து புலிகளின் பிஸ்டல் குழு உறுப்பினரொருவரும் கைது செய்யப்பட்டார். அத்துடன் பதுளை லுனுகலை பொலிஸ் அதிகாரியொருவர் சுடப்பட்ட சம்பவம் தொடர்பிலும் இரு புலி உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்.

அதேவேளை பதுளை யூரி தோட்டத்தில் ஈழக்கொடியொன்று ஏற்றப்பட்டிருந்ததுடன் அக்கொடி ஜே.வி.பியுடன் தொடர்புடைய சில இளைஞர்களால் அகற்றப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பெரும்பாலான தோட்ட பிரதேசங்களில் மாலை நேரங்களில் இளைஞர்களுக்கு ஆயுதங்களின்றி உடல் ரீதியிலான போர் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இவற்றுக்கு மத்தியில் வெலிமடை ஒரிக் தோட்டம் மற்றும் அம்பேவெல தோட்டங்களை அண்மித்த பிரதேசங்களிலிருந்து புலிகள் இயக்கத்துடன் தொடர்புடைய நான்கு தமிழ் இளைஞர்களையும் இரு யுவதிகளையும் எட்டு லட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசிகளுடன் பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர். இவர்களிருவரும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்களாவார்கள்.

குடும்ப நல சேவையாளர் சீருடைக்கு சமமான ஆடையுடன் பதுளை பெரிய ஆஸ்பத்திரிக்கு அருகில் வைத்து புலிகள் அமைப்பைச் சேர்ந்த யுவதியொருவரை பொலிசார் கைது செய்துள்ளனர். அத்துடன் பதுளை நகரில் பயன்படுத்தப்பட்ட நான்கு முச்சக்கர வண்டிகளும் ஏழு வான்களும் காணாமல் போயுள்ளதாகவும் இவை புலிகளின் பிரதேசத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டிருக்கலாம் என புலனாய்வு பிரிவு சந்தேகிப்பதாகவும் தெரிவிக்கின்றது.

தற்பொழுது பதுளை மாவட்டத்தில் அதிகளவான தோட்;டங்களை அண்டிய பகுதிகளில் புலிப்பயங்கரவாதிகள் மூலம் நிதி சேகரித்தல் மற்றும் உடற்பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளதுடனும் தோட்டங்களில் பாரியளவிலான இளைஞர்கள் புலிகள் இயக்கத்தில் போர் பயற்சிகளை பெற்றுவிட்டு தோட்டங்களுக்கு திரும்பியுள்ளதாகவும் புலனாய்வு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புகளை பேணிவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மொனராகலை, பிபிலை மற்றும் படல்கும்புர ஆகிய பிரதேசங்களில் இவர்கள் சிங்கள யுவதிகளை திருமணமுடித்துள்ளனர். அவர்கள் புலிகள் இயக்கத்துடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிப்பதாக பாதுகாப்பு தரப்பு தெரிவிக்கின்றது. இதற்கு முன்னர் புலிகள் இயக்கத்தினர் மூலம் மொனராகலையை அண்மித்துள்ள அதிமலை, கொட்டியாகலை, கேகலுயாய ஆகிய கிராமங்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டு பாரியளவு அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்துள்ளனர்.

தோட்ங்களுக்கு புலிகள் இயக்கத்தினர் வந்து செல்லும் ஆபத்தினை கருத்திற்கொண்டு தோட்ட முகாமையாளர்களின் ஆலோசனைகளுக்கு அமைய அண்மையில் ஊவா மாகாணத்தில் விசேட பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கமைய இம்மாவட்டத்தின் 62 தோட்டங்களில் விசேட பாதுகாப்பு பிரிவுகள் அமைக்கப்பட்டுள்ளன.

இதனைத் தவிர நுவரெலியா, அட்டன், கண்டி மற்றும் கம்பளை அகிய தோட்டங்களிலும் அதிகளவிலான புலி உறுப்பினர்களை பாதுகாப்பு தரப்பினர் கைது செய்துள்ளனர்.

அதேவேளை நுவரெலியா இராணுவ முகாமின் புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் புலிகள் இயக்கத்தினால் கொல்லப்பட்ட முதலாவது புலனாய்வு அதிகாரியாவார். இவர் தோட்ட பிரதேசங்களை புலனாய்வு செய்து வந்தவராவார்.

தோட்டங்களில் புலிகளின் செயற்பாடுகள் அவ்வாறு மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் ஊவா மாகாணத்திற்காக புலிகள் இயக்கத்தினர் மூலம் தலைவர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அவர் மட்டக்களப்பு செங்கலடியில் அமைந்துள்ள முகாமிலிருந்து செயற்படுவதாகவும் புலனாய்வு பிரிவிற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

தோட்டப் பகுதிகளில் புலிகளின் செயற்பாடுகளுக்கு தோட்டங்களில் இயங்கும் பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்கள், தொழிற்சங்கங்கள் மற்றும் அடிப்படைவாத கிறிஸ்தவ அமைப்புக்களிடமிருந்து சிறந்த ஒத்துழைப்பு கிடைக்கின்றது. இவ் அமைப்புக்கள் தோட்டடப் பகுதிகளில் ஈழக்கொள்கையை பரப்புவதற்கு திடமான முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகவும் எமக்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

அதேபோல் ஊவா மாகாணத்தில் செயற்படும் அரச சார்பற்ற நிறுவனங்களில் ஒரு அரச சார்பற்ற நிறுவனம் மீது மட்டும் எமது கவனம் திரும்பியுள்ளது. அவ் அமைப்பு ஊவா மாகாண சபையிலுள்ள தமிழ் அரசியல் வாதியொருவரது என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இவ் அமைப்பு தோட்டங்களிலுள்ள இளைஞர் யுவதிகளை புலிகள் இயக்கத்திற்கு பெற்றுக்கொடுப்பதற்கு மிகவும் நுட்பமான முறையில் செயற்பட்டு வருவதனை காணக்கூடியதாகவுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்கட்டுரையாளர் மேலும் அப்புத்தளை, பூனாகலை, பண்டாரவளை, மடுல்சீமை, ஹீனகலை, பசறை, அடாவத்தை, கந்தேகெதர, ரங்கமலேவத்தை, நாரங்கலை, சார்னியா தோட்டம் மற்றும் நக்கல தோட்டம் ஆகிய தோட்டங்களிலும் புலிகளின் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாகவம் கண்டுபிடித்தள்ளார்.

இக்கட்டுரையில் பிரசுரமான தகவல்கள் தொடர்பாக விடுதலைப்புலிகளின் இராணுவப் பேச்சாளர் இளந்திரையினுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு கேட்டபோது தமிழ் ஈழத்திற்கு வெளியில் உலகெங்கும் வாழும் அனைத்து தமிழர்களும் தமிழ் ஈழத்தை ஆதரிக்கின்றவர்கள். இன்று சகலரும் எமது எழுச்சியை ஆதரிக்கின்றனர். எங்களுடைய துன்பத்திலும் வேதனையிலும் பங்கெற்கின்றவர்களாக காணப்படுகின்றனர்.

அது அமெரிக்காவானாலும் சரி மலையகமென்றாலும் சரி நாம் படும் துன்பங்களுக்காக வருந்தகின்றனர். இலங்கை அரசாங்கம் மற்றும் பேரினவாத அரசியல் சக்திகள் தமிழர்கள் மீது பழி சொல்லி அச்சுறுத்தி வாக்கு பெற்றுள்ளமையே சிங்கள அரசாங்கத்தின் வரலாறு. அதன் அடிப்படையிலே பேரினவாத சிந்தனையுடன் அக்கட்டுரையில் தகவல்கள் பிரசுரிக்கப்பட்டுள்ளது.

யூரி என்ற தோட்டத்தில் ஈழக் கொடியொன்று ஏற்றப்பட்டதா என எனக்கு தெரியாது. ஆனால் இராணுவ ரீதியிலான நடவடிக்கைகளையோ புலனாய்வு நடவடிக்கைகளையோ எமது கட்டுப்பாட்டு பிரதேசத்திற்கு வெளியில் மேற்கொள்வதில்லை என்று அவர் தெரிவித்தார்.

இவ்விடயம் தொடர்பாக ஊவா மாகாண சபையின் உறுப்பினர் கா.வேலாயுதத்திடம் கருத்துக் கோட்டபோது இந்த பத்திரிகை அமைதியாக இருக்கும் மலையக இளைஞர்களின் மனதை வேறு திசைக்கு திருப்பும் ஓர் செயலாகும். பதுளை புலிகளின் மாகாணம் அல்ல. இங்கு சகல இன மக்களும் ஒற்றுமையுடன் ஒன்றாய் வாழும் மாகாணமாகும்.

மலையக சமூகம் பற்றி தப்பான கண்ணோட்டத்தில் வெளியிட்டுள்ள அக் கட்டுரையில் எவ்வித உண்மையும் இல்லை. மலையக இளைஞர்களை புலிகளென சித்திரிப்பதற்கு முயற்சியெடுத்துள்ளமை முற்றிலும் தவறானது. இப்பத்திரிகை இதன் மூலம் மலையகத்தில் யுத்த பீதியை ஏற்படுத்தவதற்கு முயற்சிசெய்துள்ளது. இது அம்மக்களை பொருளாதார ரீதியில் முடக்கும் ஓர் செயலெனவும் அவர் தமது விசனத்தை தெரிவித்தார்.

இது தொடர்பாக பதுளை பொலிஸ் நிலையபொறுப்பதிகாரியிடம் கேட்டபோது எமக்கும் புலனாய்வு பிரிவிலிருந்து தகவல்கல் கிடைத்தள்ளன, பயிற்சிபெற்ற புலி உறுப்பினர்கள் வருகை தந்துள்ளதாக. இதன் அடிப்படையில் ஓரிரு நாட்களில் சுற்றிவளைப்புகளை மேற்கொள்ளவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இவை எவ்வாறிருப்பினும் உறுதியற்ற சாட்சிகளின்றி தகவல்களை வெளியிட்;டிருப்பதால் இம்மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்தையும் அம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளின் கடமையாகும். இதனால் அப்பாவி பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.

இவ்வாறான இனவாத கண்ணோட்டத்தில் செயற்படும் ஊடகங்களிடம் நாம் கேட்டுக்கொள்வது தமிழ் சமூகங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரமாவது செய்யாதிருங்கள் என்பதாகும்.

Friday, January 5, 2007

'மன்னாரில் இறந்த சிறுவர்கள் புலிகள் என்றால் கெப்பிற்றிகொல்லாவைவையில் இறந்த சிறுவர்களும் புலிகளே"










by tamilnet
Mannar attack

எஸ். நயனகணேசன்

ஊடகங்களிலும், வீதிகளிலும், விளம்பரங்களிலும் மற்றும் பொது மக்கள் மத்தியிலுமென அனைத்து இடங்களிலும் யுத்த கோ~ங்கள் இன்று தலைதூக்கியுள்ளதனை நன்கு அவதானிக்க கூடியதாயுள்ளது. வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தம் பற்றி பெரும்பாலான சிங்கள சமூகங்கள் போர் விமர்சகர்களாக மாறியுள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
வடக்கு கிழக்கில் பயங்கரவாதிகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்வதாகக் கூறிக்கொண்டு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களில் தினமும் அப்பாவி பொது மக்கள் பலியாகிக் கொண்டிருக்கின்றார்கள் என்பது உலகறிந்த உண்மை.
அந்த வகையில் வடக்கு கிழக்கில் இடம்பெற்று வரும் யுத்தத்தினை சிங்கள மக்களுக்கு மாறுபட்ட வகையிலும் பாரபட்சமான முறையிலும் அரசின் செயற்பாடுகளுக்கு ஜால்ரா போடும் வகையிலும் செயற்பட்டு வருகின்றமை இவ் யுத்தத்திற்கு வலுச் சேர்க்கின்றது.
கடந்த பல வருடங்களாக சிங்கள பேரினவாத ஊடகங்களில் மேற்கொள்ளப்பட்டு வந்த உளவியல் ரீதியிலான ஊடகப் போர் இன்று அது முழு அளவிலான ஊடகப் போராக உருவெடுத்துள்ளதனை அவ் ஊடகங்களின் செய்தியறிக்கைகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது.
இன்று அரசாங்கமும் விடுதலை புலிகள் மீதான போரை முழு அளவில் மேற்கொள்வதற்காக நாட்டின் அனைத்து மக்களுக்கும் அறைகூவல் விடுத்திருக்கின்றதனை அதன் செயற்பாடுகளிலிருந்து காணக்கூடியதாயுள்ளது. போர் என்ற பெயரில்

by Anurudha lokuapuarachchi

Kepittigollewa attack

பொது மக்களை கொன்று குவித்துக் கொண்டிருக்கின்றது அரச படைகள்.
2007 ஆம் வருடத்தின் ஆரம்ப வைபவமாக அரச படைகள் மன்னார் படகுத்துறை கிராமத்தில் தமது காட்டுமிராண்டித்தனத்தை அப்பாவி பொது மக்கள் மீது எடுத்தக்காட்டியுள்ளது. அத்துடன் அவர்களுக்கு புலிகள் என்ற முத்திரையையும் குத்தியுள்ளது.
நாட்டின் இனப்பிரச்சினை அன்று இந்தளவு உக்கிரமடைந்தமைக்கு ஆட்சியிலமர்ந்த பேரினவாத அரசாங்கங்கள் மட்டுமன்றி பேரினவாத ஊடகங்களின் பங்களிப்பும் இன்றியமையாததாக அமைந்துள்ளது.
அந்த வகையில் தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படுகின்ற வன்முறைகளை பெரும்பான்மை சிங்களவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரினவாத ஊடகங்கள் அவ் வன்முறைகளை திரிபுபடுத்தியும் மாறுபட்ட வகையிலும் சிங்கள சமூகத்தினருக்கு எடுத்துரைக்கின்றன. அவ்வாறான ஊடக பிரயோகத்தின் விளைவாக 'சிங்களவர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறான வன்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என்ற வினாவை வியப்புடன் கேட்குமளவிற்கு விசித்திரமாகவுள்ளது.
அந்த வகையில் கடந்த 02 ஆம் திகதி படகுத்துறை கிராமம் மீது இலங்கை விமானப்படையினர் மேற்கொண்ட விமானத் தாக்குதலில் பொதுமக்கள் பலியானமை உலகறிந்த உண்மையாகும். அத்தாக்குதலில் சிறுவர்கள், பொதுமக்கள் உயிரழந்தமைக்கு புகைப்படங்களுடன் சாட்சிகள் உள்ளன.
ஐக்கிய நாடுகள் சபையின் மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒத்துழைப்பு பிரிவு அலுவலகம் கடந்த 03 ஆம் திகதி விடுத்த அறிக்கையிலும் தமது கண்டனத்தை தெரிவித்துள்ளது.

மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் விடுத்த அறிக்கையில் 1995 ஆம் ஆண்டு போரினால் இடம்பெயர்ந்த மிகவும் வறிய மக்களே இத்தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தமது கண்டனத்தையும், கவலையையும் மற்றும் உண்மைச் சம்பவத்தினையும் எடுத்துரைத்துள்ளார்.
இத்தாக்குதல் இடம்பெற்ற தினத்தன்று மாலை முழு உலகிற்கும் ராய்ட்டர் செய்திச் சேவை மற்றும் பிபிசி ஏஎப்பி ஆகிய செய்தி சேவைகளும் காயமடைந்த உயிரிழந்த சிறுவர்களின் புகைப்படங்களுடன் பிரசுரித்திருந்தன.
சிங்கள பத்திரிகைகளை தவிர பிரதான தர தமிழ் பத்திரிகைகள் மூன்றும் புகைப்படங்களுடன் பிரதான தலைப்புச் செய்திகளாக பிரசுரித்திருந்தன.
ஆங்கிலப் பத்திரிகைகள் பல்வேறுபட்ட வகையில் செய்திகளை பிரசுரித்திருந்தன. ஆனால் அவை எந்தவகையிலாவது பொது மக்கள் உயிரிழந்துள்ளார்கள் என்பதனை குறிப்பிட்டுள்ளன. டெய்லி மிரர் மற்றும் மோர்னிங் லீடர் ஆகிய பத்திரிகைகள் அனைத்து தரப்பையும் ஆவணப்படுத்தியிருந்தன. ஆனால் காயமடைந்தவர்களின் புகைப்படத்தினை பிரசுரிப்பதற்கு மோர்னிங் லீடர் பத்திரிகைக்கு மட்டுமே தைரியம் ஈரந்துள்ளது.
சிங்கள நாளிதழ்களில் லக்பிம பத்திரிகை '300 கடற் புலிகள் கூடியிருந்த புலிகளின் முகாம் மீது விமானப்படை தாக்குதல். இத்தாக்குதலில் 30 புலி உறுப்பினர்கள் மரணம்". என அச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த பட்சம் உயிரிழந்தவர்கள் பற்றி எவ்வித தகவலையும் பிரசுரிக்கவில்லை. அவ்வாறான செய்தியை அரசாங்கம் கூட தெரிவிக்கவில்லை. ஆனால் லக்பிம பத்திரிகை மிகப் பாரிய பொய்யை தமது வாசகர்களுக்கு வழங்கியுள்ளது.
வழமைக்கு மாறாக செய்திகளை (வடக்கு கிழக்கு செய்திகளை மட்டும்) பிரசுரிக்கும் திவயின பத்திரிகை பெரிதாக அச்சம்பவத்தினை அறிக்கையிடவில்லை. லங்காதீப பத்திரிகை அச்சம்பவத்தினை முன்பக்க செய்தியாக பிரசுரித்திருந்தது.
தமிழ் பிரதேசங்களில் தமிழர்கள், சிறுவர்கள் , பெண்கள் கொலை செய்யப்படும் பொழுது சிங்கள நாளிதழ்கள் அவற்றை பிரசுரிப்பதில்லை. இது ஊடக ஒழுக்க நெறிக்கு முற்றிலும் புறம்பானது. சிங்கள நாளிதழ்களுக்கும் பாதுகாப்பு அமைச்சின் பேச்சாளர் கேஹலிய ரம்புக்வெல்லவின் கூற்றுக்கு படகுத்துறையில் உயிரிழந்த சிறுவர்களும் பெண்களும் புலிகள் என்றால் கெப்பிற்றிகொல்லாவை சம்பவத்தில் உயிரிழந்த சிறுவர்களும் பெண்களும் புலிகளாவார்கள்.
அந்த வகையில் கடந்த வருடம் ஜுன் மாதம் 10 ஆம் திகதி மன்னார் வங்காலை தோமஸ்புரியில் குடும்பமொன்று படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக இது வரையில் ஆக்கப்பூர்வமான எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையிலே மற்றுமொறு கோரத்தாண்டவம் இலங்கை விமானப்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கும் சொல்லுவார்களா? சாக்கு போக்கு. அல்லது குற்றத்தை ஒப்புக்கொள்வார்களா? என்ற கேள்வியை அரசாங்கத்திடமும் சிங்கள ஊடகங்களிடமும் கேட்கின்றோம்.

Monday, January 1, 2007

ஏமாற்றத்தில் வரலாறு காணும் மலையக மக்கள்

எஸ்.நயனகணேசன்

'எங்களுக்கு 300 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தராவிட்டால் இறுதி வரை
நாங்கள் வேலைக்கு போகமாட்டோம். நாம் இன்று மிகுந்த க~;டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.அரசாங்கமும் தோட்டக்கம்பனிகளுமே இவ் சம்பள உயர்வை எமக்கு பெற்றுத்தரவேண்டுமென" குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள கெப்பிட்டிகலை தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான பி.சரோஜா (42) இவ்வாறு தமது வேதனையை வெளிப்படுத்தினார்.
கடந்த 14 ஆம் திகதி மாவத்தகமை பிட்டியகந்தை தோட்டத்தில் சம்பள உயர்வு கோரி நடைபபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒன்பது தோட்டங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவை பிட்டியகந்தை,முவான்கந்தை,நொட்டிங்ஹில்,மொறத்தன்னை,கொக்காவத்தை,பிளஸ்ஸ,கெப்பிட்டிகலை,மாலம்பே,புகையிலைமலை ஆகிய தோட்டங்களைச் சேரந்த சுமார் 500 ற்கும் தோட்டத் தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த 13 நாட்களாக, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து பெருந்தோட்டங்களும் 300 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளன.தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் செவ்வனே தமது வேதன உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் அதேவேளை முதலாளிமார் சம்மேளனம் தமது பிடிவாத போக்கிலிருந்து விடாப்பிடியாக இருந்து வருகின்றமை மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.
தற்போதைய சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர்கள் 160 ரூபாவினை அடிப்படைச் சம்பளமாகப் பெற்று மிகுந்த க~;டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையிலே தோட்டத்தொழிலாளர்கள் தமது வாழ்க்கைத்தர உயர்வுக்காகவும் ஏனைய சமூகத்தவர்களினைப் போன்று வாழ்வதற்காகவுமே 300 ரூபா சம்பள உயர்விற்காக போராடி வருகின்றனர் என்றால் அதில் தவறில்லை என்பதே அனைவரினதும் வாதமாகும்.
மேலும் அப்பெண் தொழிலாளி கருத்துத் தெரிவிக்கையில் 'நான் கடந்த 24 வருடங்களாக இறப்பர் தோட்டத்தில் வேலை செய்து வருகின்றேன்.இதுவரை காலம் கை நிறைய சம்பளம் பெற்றதில்லை.என்று தான் நாமும் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பது."
'நாங்கள் தற்பொழுது பெறும் சம்பளம் எமது வாழ்க்கைத் தரத்திற்கு எவ்விதத்திலும் பொறுத்தமற்றது.அரசாங்கமும் தோட்டக்கம்பனிகளும் தோட்டத்தொழிற்சங்களும் எமக்கு இவ் சம்பள உயர்வை பெற்றுத்தருவதற்கு முன்வரவேண்டும்.எமக்கு இவ் சம்பளத்தை பெற்றுத்தராவிட்டால் இறுதி வரை நாம் வேலைக்கு செல்லமாட்டோம்" என அவர் அங்கலாய்த்து கொண்டார்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கே.பாலசுந்தரம் (42) என்ற தொழிலாளி கருத்துத் தெரிவிக்கையில் 'நாங்கள் கடந்த 10 நாட்களாக சம்பள உயர்வு போராட்டத்தில் குதித்துள்ளோம்.இப்பொழுது எமக்கு இவ் 300 ரூபா சம்பள உயர்வினை பெற்றுக்கொள்வதனைத் தவிர வேறு வழிகள் இல்லை.ஏன் இவர்கள் எமக்கு இந்த அநியாயத்தை செய்கின்றனர்.நாம் நினைக்கின்றோம் இவ் சம்பள உயர்வு போராட்டத்தை எம்மால் வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள முடியுமென்று.தற்பொழுது தொழிற்சங்கள் அனைத்தும் எம்மை பட்டினிப்போட்டு வீதியில் இறக்கி விட்டு எம்மீது பழியை போட்டு விட்டு எம்மை ஓரங்கட்டி விட்டுள்ளனர்.இவ்வாறான பிளவுகள் காரணமாகவே தொழிலாளர்களின் உரிமைகளை எம்மால் இதுவரை வெற்றி கொள்ள முடியாதுள்ளது.இனிமேலும் தொழிற்சங்கள் எம்மை பகடைக்காள்களாக்குவதை விட்டு விட்டு நாமனைவரும் ஒன்றாக போராட முன் வரவேண்டுமென" அத்தொழிலாளி தொழிற்சங்கள் மீது தமது விசனத்தை தெரிவித்துக் கொண்டார்.
உண்மையில் இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்குப் பெற்றுக்கொடுக்கப்படடுள்ள சம்பள உயர்வு வரலாற்றினை நோக்கினால் 1927 ஆம் ஆண்டு ஒரு நாட் சம்பளம் 29 சதத்தினால் அதிகரிக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு 56 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஒரு நாட் சம்பளமாக 72 ரூபா 24 சதம் வரை வழங்கப்பட்டதுடன்; 1996 ஆம் ஆண்டு 83 ருபாவாகவும் 1998 ஆம் ஆண்டு 95 ரூபாவாகவும் 2001 ஆம் ஆண்டு 101 ரூபாவாகவும் 2002 ஆம் ஆண்டு 121 ரூபாவாகவும் 2004 ஆம் ஆண்டு 135 ரூபாவாகவும் ஒரு நாட் அடிப்படைச்சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
அதேவேளை அவ் அடிப்படைச் சம்பளத்துடன் ஒப்பிடுமிடத்து அரசாங்கத்திற்கு சொந்தமான (துநுனுடீ) தேயிலைத் தோட்டத்தொழிலாளியொருவருக்கு மாதம் 26 நாட்கள் தொழில் தோட்டத்தில் வேலை செய்தால் கிடைக்கும் மொத்த சம்பளம் 3510 ருபவாகும்.அவ் மொத்த சம்பளத்துடன் கொடுப்பனவுகள் இணைந்து 1742 ரூபா மேலதிகமாக கிடைக்கின்றன.ஆக மொத்தம் 5252 ரூபாவாகும்.இவ் மொத்த சம்பளத்தில் 229 ரூபா 50 சதம் ஊழியர் சேமலாப நிதிக்காகவும் 1150 ரூபா முற்பணத்திற்காகவும் 45 ரூபா தொழிற்சங்க சந்தாவிற்காகவும் தேங்காய் அல்லது தேயிலை பெற்றிருப்பின் 4 ரூபாவும் 50 ரூபா ஊழியர் சேம நலனிற்காகவும் 20 ரூபா சலவைக்காகவும் காணிக்கடன் 537 ரூபா 50 சதமாகவும் (பதினைந்து வருட கழிவு அடிப்படையில்) கழிக்கப்பட்டு இறுதியில் எஞ்சுவது 3216 ரூபாவாகும்.
இன்று சாதாரணமாக அறுவர் கொண்ட குடும்பமொன்றிற்கான மாதாந்த செலவு பதின்மூவாயிரத்தினையும் அதிகரித்துச் செல்கின்றது.ஆனால் இருவர் வேலை செய்யும் தோட்டத்தொழிலாளியொருவரின் குடும்பம் பெறும் மாதாந்த மொத்த மொத்தச் சம்பளம் 6432 ரூபவாகும்.இந்தளவு இக்கட்டான சூழ்நிலையில் வாழும் தோட்டத்தொழிலாளர்களுக்கே 300 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதில் முதலாளிமார் சம்மேளனம் முரண்டு பிடித்து வருகின்றன.
உண்மையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது தான்.தொழிற்சங்கங்கள் நினைத்தால் பத்து லட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் சந்தாப்பணத்திலிருந்து கூட இவ் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க இயலும். ஆகையால் முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர்களின் க~;டத்தினை உணரந்து இவ் சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே அனைவரினதும் அவாவாகும்.
இன்று இவ் தொழிற்சங்க போராட்டத்தில் நாண்கு பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புக்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,லங்கா தேசிய தோட்டதொழிலாளர் சங்கம்,பெருந்தோட்டத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றில் பன்னிரெண்டு தொழிற்சங்கங்கள் உள்ளடங்களாக இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
அதேவேளை தொழிற்சங்க தலைவர்கள் இன்று போட்டியடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.135 ரூபா சம்பள உயர்விலிருந்து 250 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக அதாவது 100 வீதம் பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பெ.சந்திரசேகரன் தலைமையிலான தொழிற்சங்கம் கூறுகின்றது..இது எவ்விதத்திலும் சாத்தியமற்றது.ஏனெனில் இதுவொரு தொழிற்சங்க போராட்டம்.பொருளாதாரத்திற்கான போராட்டம்.எந்தவொரு சம்பள உயர்வு போராட்டத்திலும் 100 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதில்லை.அப்படி இலங்கையில் ஜனாதிபதிக்கு மட்டுமே நூறு வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.வேறு எவருக்கும் வழங்கப்பட்டில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் பிளவுப்பட்டுள்ள நிலைமையினை காணக்கூடியதாயுள்ளது.இவற்றின் வெளிப்பாடுகளே தொழிற்சங்க அமைப்புகளின் பத்திரிகையாளர் மகாநாடுகளை நாம் நோக்கக்கூடியதாயுள்ளது.
இன்று இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் 170 ரூபா அடிப்படைச் சம்பளமும் 90 ரூபா கொடுப்பனவாக மொத்தம் 260 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் சம்மதித்துள்ளன. இவற்றில் 20 ரூபா நிரந்தர கொடுப்பனவாகவும் வரவு 75 சதவீதமாகவிருப்பின் 70 ரூபாவாகவும் வழங்கப்படவுள்ளன.இது ஒரு வகையில் வரவேற்கக்கூடியதாயிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோட்ட தொழிலாளர்களுக்கு கோரப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டதற்கான சரித்திரம் இருந்ததில்லை.
இவ் சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம் தொண்டமான் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் எஸ்.ராமநாதன் மற்றும் தேசிய தோட்ட தொழிலாளர் சம்மௌனம் சார்பில் க.வேலாயுதம் ஆகியோர் கையொப்பமிட்டனர்.முதலாளிமார் சம்ளேனம் சார்பில் லலித் ஒபேசேகர மற்றும் கோடாபய திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் கையொப்பமிட்டனர்.