Tuesday, February 20, 2007

கொலை செய்தலென்பது ஒரு கொள்கையா?











எஸ்.நயனகணேசன் Picture by S.Thushan

கொலை செய்தலென்பது ஒரு கொள்கையா?


இன்று இலங்கையில் வாழும் தமிழர்கள் பாரிய நெருக்கடிக்கடிகளுக்கு மத்தியிலும் எந்தவித உத்தரவாதமுமில்லாத நிலையில். வாழந்து வருகின்றனர்.வடக்கு கிழக்கில் இன்று ஒரு படுகொலையாவது நிகழாமல் சூரியன் அஸ்தமிப்பதில்லை என்றளவிற்கு வன்முறை கலாசாரம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருப்பதனை காணக்கூடியதாயுள்ளது.


தென்பிராந்தியத்தில் மக்கள் மத்தியில் இனவாத உணர்வலைகள் அதிகரித்துச் செல்லும் நிலையில் அவற்றுக்கு ஆதரவாகவும் அவற்றுக்கு தீனிபோடும் வகையிலும் அரசியல் கட்சிகளும் அமைச்சர்களும் என அனைவரும் அவ் இனவாத செயற்பாடுகளுக்கு ஆதரவாக அணிதிரண்டுள்ளதனையும் காணக்கூடியதாயுள்ளது.

இலங்கையில் இன்று தமிழர் மீது தினிக்கப்படும் வன்முறைகளையும் அப்பட்டமான மனித உரிமை மீறல்களையும் இன்று முழு உலகமும் இலங்கை அரசாங்கத்திற்கு கண்டனத்தையும் எதிர்ப்பையும் தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் அன்மையில் புலிகளுடன் தொட்ர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட பெரும்பான்மையின்த்தை சேரந்த மூன்று சிஙகளவர்களின் பின்னனியில் இன்று அனைத்து தமிழர்களும் புலிகள் என்ற சந்தேகப்பார்வையில் பார்க்கும் படலம் ஆரம்பித்துள்ளதுடன் அவர்கள் மீதான கைதுகளும் அதிகரித்துள்ளன.

அதேவேளை தென்னிலங்கையில் யுத்தத்தினை தீவிரப்படுத்தும் வகையிலான பிரச்சாரங்கள் பேரினவாதிகள் மூலம் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றதனை கொழும்பில் பல புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகள் அவற்றை நன்கு எடுத்துக் காட்டுகின்றன.
அச்சுவரொட்டியில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,


அது,

சமாதான புலிகள்

ஊடக புலிகள்

இடதுசாரி புலிகள்

இணங்கண்டு கொள்வோம்

அழிப்போம்

நாட்டை பாதுகாப்போம்

பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கம்

பயங்கரவாதத்திற்கெதிரான இவ் அமைப்பின் தலைவர் அனுருத்த பிரதீப் ஆவார்.இவர் ஜாதிக ஹெல உறுமய கட்சியைச் சேர்ந்தவராவார்.

இச்சுவரொட்டியின் கூற்றுக்கு அமைய இதுவொரு பயங்கரமான நிலைமையாகும்.அப்படியாயின் மற்றுமொரு பந்தியையும் இணைத்துக் கொள்ளல் வேண்டும்.அது ஆர்மி புலிகள் என்பதாகும்.இச்சுவரொட்டியில் அழிக்குமாறு கூறப்பட்டுள்ளது.அப்படியாயின் மனிதர்களையல்லவா கொலை செய்ய சொல்கின்றனர்.கொலை செய்யுமாறு சுவரொட்டி ஒட்டும் இவ்வியக்கம் கொலை செய்யாமல் இருக்குமா? கருத்துச் சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக பொறுப்பின்றி எதனையும் கூறமுடியாது.கொலை செய்யப்படவேண்டுமென்பது ஒரு கொள்கையா?தமது கொள்கைகளுக்கு முரணாணவர்களை கொலை செய்யப்பட வேண்டுமென சமூகத்தை தூண்டுதல் பாரிய குற்றமாகும்.அதன் மூலம் இனச்சங்காரமே ஏற்படக்கூடும்.அவ்வாறு இடம்பெற்றால் அதற்கு யார் பொறுப்பு?

அதேவேளை இது தொடர்பாக சுற்றாடல் வள அமைச்சர் கடந்த வாரம் ராவய பத்திரிகையில் தெரிவித்திருந்த கருத்தையும் இங்கே பிரசுரிக்கின்றோம்.

அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது
இவன்களை மிச்சம் வைக்கவா சொல்கிறீர்கள்?சுற்றாடல் வள அமைச்சர் சம்பிக்க ரணவக்க.


நான் பயங்கரவாதத்திற்கு எதிரான இயக்கத்தின் உறுப்பினர் அல்ல.ஆனால் நீங்கள் கூறுகின்ற அந்த போஸ்டருடன் நான் முழுமையாக இணங்குகின்றேன்.இன்று இலங்கையில் ஊடகவியலாளர்கள் என்பவன்கள் யார்?

தமிழ் இளைஞர்கள் என கூறப்படுபவர்கள் யார்?அப்படி எவனும் இல்லை.இவன்கள் எல்லோரும் வெளிநாட்டு நிதியில் தங்கியிருக்கும் என்ஜிஓகாரர்கள்.

சமாதானம், யுத்தத்திற்கெதிரான எனக்கூறிக்கொண்டு புலிகளை உருவாக்கியது மட்டுமன்றி நாட்டையும் காட்டிக் கொடுத்து தரகர் வேளை பார்ப்பதையே இந்த பேப்பர்காரர்கள் செய்கின்றனர்.இடது சாரிகள் எனக்கூறிக்கொள்ளும் கூட்டமும் இதனைத்தான் செய்கின்றது.நாட்டில் இருக்கும் சட்டங்களில் இவன்களை தடுக்க முடியாவிடில் முடிந்த எந்த முறையிலாவது அதனை செய்யவேண்டும்.ஆம்.


மனிதர்கள் இறக்கின்றார்கள் தான்.அதற்கு என்ன செய்ய முடியும்.இவன்களை மிச்சபடுத்தவா எங்களுக்கு கூறுகின்றீர்கள்.இவன்கள் தேசத்துரோகிகள்.

இந்த நாட்டில் இருக்கின்ற கழுதைத்தனமான சுதந்திரம் காரணமாகத்தான் எதுவும் செய்யமுடியாமல் இருக்கின்றது.கூறப்படும் அந்த சட்டங்களில்இத்தேசத்துரோகிகளை தடுக்கமுடியாவிடில் முடிந்த விதத்தில் அதனை எமக்கு செய்யத் தெரியும்.ராவயைப் பற்றியும் எமக்குத் தெரியும்.ராவய என்ன செய்கின்றது என்பது பற்றியும் எமக்குத் தெரியும்.தமிழன்கள் இறக்கும் பொழுது ராவயவிற்கு கவலை என்றும் எமக்குத் தெரியும்.

ஹலோ நான் சொல்வது இதுதான்.போஸ்டர் அடித்து அடக்க முடியாவிடில் முடிந்த முறைகளிலாவது இவன்களை அடக்க வேண்டும்;.அதனால் தான் நான் இந்த போஸ்டருடன் அரசியல் ரீதியில் இணங்குகின்றேன் எனத் தெரிவித்தேன்.

நீங்கள் கூறும் இந்த போஸ்டர் தவறு என கூறி உங்களால் என்ன செய்யமுடியும்?


தர்மத்தை போதிக்க வேண்டிய பிக்குமார்கள் ஜாதிக்க ஹெல உறுமய கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தி பாராளுமன்றம சென்றதுமட்டுமன்றி தமிழர்களுக்கு எதிராக சண்டமாருதம் செயதும் வருகின்றனர்..இதனையா அமைதியே உருவான போதி மாதவன் புத்தர் இவர்களுக்கு போதித்தார்.


யுத்தத்தில் வெற்றியடைந்த நாடுகள் உலகில் எங்கும் இல்லை என்ற உண்மை அறிந்தும் கூட தென்னிலங்கை அரசியல் சக்திகளும் அரசாங்கமும் யுத்தத்தில் தீவிர நம்பிக்கையைக் கொண்டு செயற்படுகின்றமை பாரிய அழிவிற்கே வழிவகுக்கும் என்பதனையும் சொல்லி வைக்க விரும்புகின்றோம்.

No comments: