Picture by S.Thushan
மலருமா சமாதானம்?
சில
சமாதான வாதிகள்
பயிலை தூக்கிக்கொண்டு
சமஷ்டி முறைமை பேசி அலைகின்றார்கள்
ஆனால்
அடுத்த வீட்டு ஆண்டி அண்ணனோடு மட்டும்
ஒற்றை ஆட்சி கோட்பாடுகளோடு
கோபித்துக் கொள்கின்றார்கள்
* * *
சமாதானம்
ஒவ்வொருவருக்கும் இடையில்
ஏற்பட்டால் தான் - அது
ஆல மர நிழல் இதத்தை
தரும் என்பதை
சமஷ்டி பயில் சுமக்கும்
சகோதரர்கள் உணர ஏன் மறந்தார்கள்?
* * *
நமது
நாட்டில் உப்பளங்களுக்கு
பஞ்சமேயில்லையே!
உப்பு விலையும் ஏறவில்லையே!
மதங்கள் எல்லாம் தீவிரமாய்
மனிதத்தை போதித்தும் கூட
சொரணை கெட்ட மனிதன்
இன்னும் வாழ்கிறானே.
* * *
சமாதானம்
தொலைந்து போனதால்….
பல சாம்ராஜ்ஜியங்கள்
சரிந்து போயிருக்கலாம்
பல சரித்திரங்கள்
உருவாகியிருக்கலாம்
* * *
அவை
காலம் தீர்ப்பு சொல்லி
முடிவு பெற்றவையா?
அப்படியானால்
நமது சமாதானம்
யார் கையில்?
பிட்டியகந்தை கதிர்
No comments:
Post a Comment