எஸ்.நயனகணேசன்
இம்மாதம் 05 ஆம் திகதி கொழும்பைச் சுற்றிய பகுதிகளில் கடத்திச் செல்லப்பட்டு இலங்கை புலனாய்வு பிரிவினரால் விசாரணை செய்ப்பட்டு வரும் மூன்று ஊடக தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள் தொடர்பாக 'ராவய" பத்திரிகையில் 'பிரஜை ஊடகவியலாளரொருவரின் குறிப்பு" என்ற பத்தியில் சுதந்திர ஊடக இயக்கத்தின் பேச்சாளர் சுனந்த தேசப்பிரிய எழுதிய கட்டுரையை தமிழில் தருகின்றோம்.
ஆயுத போராட்டமும் ஊடக சுதந்திரமும்
கடந்த ஐந்தாம் திகதி இரவு எமக்கு தூக்கமில்லாத இரவானது.அது முன்னாள் ஊடகவியலாளரான லலித் செனவிரத்ன தமது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்ட சம்பவமாகும்.அவரின் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக எம்மாலான அனைத்து முயற்சிகளையும் நாம் அனைவரும் மேற்கொண்டோம்.
மறு தினம் ஆறாம் திகதியும் எமக்கு தூக்கமில்லாத இரவானது.அது லலித் செனவிரத்ன உட்பட 'அக்குண" பத்திரிகையின் அலுவலக குழுவினர் தாம் விடுதலைப்புலிகள் அமைப்புடன் இணைந்து தெற்கில் வன்முறைகளில் ஈடுபட்டுள்ளதாக ஏற்றுக்கொண்டுள்ளதாக வெளியான செய்தியில் ஏற்பட்ட பரபரப்பினாலாகும். அந்த இரவிலேயே நாம் என்ன கூறப்போகின்றோம் என்ற கேள்வி எழுந்துது புகையிரத சங்க சம்மேளனத்தின் இரு மாத வெளியீடான 'அக்குண" பத்திரிகையின் செயற்பாட்டாளரான லலித் செனவிரத்ன,சிசிற பிரியங்கர மற்றும் நிஹால் சேரசிங்ஹ ஆகிய மூவரும் கடந்த 05 ஆம் திகதி கடத்தப்பட்டுள்ளனர்.கடத்திச் செல்லல் என்பது ஜனநாயக நாடொன்றில் சட்டத்தின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள செயற்பாடுகளை கவனத்திற்கொள்ளாது யாரோ ஒருவர் கடத்திச் செல்வதாகும்.
நாம் அவ் மூன்று கடத்தல்களையும் கண்டித்துள்ளோம்.அவர்கள் அரசாங்கத்தின் எந்தவொரு நிறுவனத்தின் மூலமாவது கைது செய்யப்பட்டிருப்பின் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் கோரியிருந்தோம்.
புலிகளுடனான தொடர்பு
மறு நாள் அம் மூவரும் தாம் ஆயுத போராட்டத்தின் மூலம் அதிகாரத்தை பற்றிக் கொள்ளுதலை நம்பும் புதிய காலணித்துவத்திற்கு எதிரான இயக்க பங்காளர்களென தாம் ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் அதனை விட விடுதலைப்புலிகள் அமைப்புடன்; இணைந்து செயற்படுவதாகவும் தெற்கில் பல ஆயுத வன்முறைகளை மேற்கொண்டுள்ளதனை ஏற் றுக்கொண்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
தற்பொழுது வெளியாகியுள்ள இவ் வெளிச்சம் காரணமாக அவர்கள் கடத்திச் செல்லப்பட்டபோது நாம் தெரிவித்த கருத்து குற்றமாகுமா? நாம் அவர்களின் ஆயுத போராட்டத்திற்கு மறைமுகமான பங்காளர்களாகின்றோமா?
லலித் கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக முதலாவதாக கிடைத்த தகவல் கடந்த 05 ஆம் திகதி இரவு 11.30 மணிக்காகும். அந்நேரத்திற்குள் அவரது மனைவி மேலும் இரு ஊடக நண்பர்களுடன் அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்வதற்கு சென்றிருந்தனர்.அத்துருகிரிய பொலிசாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது அத்துருகிரிய பொலிஸ் நிலையத்திற்கு எதுவும் தெரியாது எனத் தெரிவித்தனர்.
வாசுவின் தகவல்
அதன் பின்னர் காணாமல் போனவர்களை தேடும் குழுவின் சகோதரர் வாசுவுடன் தொடர்பு கொண்டோம்.அவர் உடனடியாக அத்துருகிரிய பொலிஸ் நிலையத்துடன் தொடர்பு கொண்டு விட்டு பின்னர் அவர் தெரிவித்ததாவது இரகசிய பொலிஸார் லலித் செனிவிரத்னவை கைது செய்யவில்லையென அறிவித்ததாக அவர் தெரிவித்தார்.
லலித்தை கூட்டிச் சென்றவர்கள் தாம் இரகசிய பொலிசார் என்;று தெரிவித்தனர் என லலித்தின் மனைவி காந்தி தெரிவித்தார்.ஆனால் சகோதரர் வாசுதேவ கதைத்பொழுது அவருக்கு தமக்கு எதுவும் தெரியதென இரகசிய பொலிஸார் தெரிவித்ததாக தெரிவித்தார்.நாம் இக்கடத்தல் தொடர்பாக நாட்டுக்கும் உலகிற்கும் தெரிவிப்பதற்கு தீர்மானித்ததாவது அவரை தேடிக்கொள்வதற்காக மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததன் பின்னராகும்.நாம் எடுத்த அம்முடிவு அடிப்படை மனித உரிமையினை பாதுகாத்துக்கொள்வதற்கிருக்கும் உரிமையை செயற்படுத்துவதற்காகும்.
மஹிந்த ராஜபக்~வின் இறந்த காலம்
மஹிந்த ராஜபக்~ அவர்களும் 1988 -90 காலப்பகுதிகளில் எம்முடன் இணைந்து அந்தக் காலங்களில் கடத்தல்களுக்கு எதிராக ஆதரவு வழங்கியுள்ளதினால் அவருக்கும் இதனை ஞாபகப்படுத்துதல் சிறந்தது என சிந்தித்தோம்.முயற்சித்தோம்.தெற்கின் பயங்கரவாதத்தை ஒழிப்போம் எனக் கூறிக்கொண்டே மஹிந்த ராஜபக்~ அவர்கள் அந்தக் காலங்களில் எம்முடன் இணைந்து கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தார்.ஜனாதிபதியாவதற்குரிய பிரபல்யம் கிடைத்தமையும் இவ்வாறான கடத்தல்களுக்கு எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டு அரசாங்கத்திற்கு கண்டனம் தெரிவித்துக்கொண்டு கட்டியெழுப்பிய 'மௌ பெரமுன" அமைப்பினூடாகும்.
கடத்திச் செல்லப்படுவது ஆயுத குலுக்கல் மூலமோ அரசாங்கத்தினாலோ கடத்திச் செல்லப்படும் நபர்களின் அரசியல் செயற்பாட்டை கவனத்திற் கொள்ளாது அவற்றுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சம்பிரதாயமொன்றுள்ளது.இந்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் எந்தவொரு சந்தர்ப்பத்திலாவது அவ்வாறான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.கட்டியெழுப்பியுள்ளனர்.
ஆனால் நிலையானதொரு அடிப்படையின் கீழ் சட்டத்தின் ஆட்சிக்கமைய செயற்படுமாறு கடத்திச் செல்லல் மற்றும் காணாமல் போதல் போன்றவற்றிற்கு எதிராக செயற்பட்டுள்ளமை இந்நாட்டின் மனித உரிமை இயக்கங்களில் சிற்சில நபர்களினால் மட்டுமே குரல் கொடுக்கப்பட்டுள்ளது.
கடத்திச் செல்லப்பட்ட தொழிற்சங்க ஊடக செயற்பாட்டாளர்கள் தொடர்பாக நாம் அதவாது சுதந்திர ஊடக இயக்கம் மேற்கொண்ட மற்றும் தெரிவித்திருந்த நிலைப்பாடுகள் மற்றும் வரலாற்று அனுபவங்களினடிப்படையிலே நாம் மனித உரிமைகளை பாதுகாப்பது.
சரியான சவால்
ஜனநாயக சமூகமொன்றில் ஒழுக்க விழுமியங்களை பாதுகாக்கும் சரியான சவால் அமைதியான சூழலில் ஏற்படாது.ஜனநாயகமல்லாத இயக்கங்களுக்கு முகம் கொடுக்கையிலாகும்.ஆனால் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேற்கொள்ளப்படும் கடத்தல்கள் துன்புறுத்தல்களை மேற்கொள்ளல் மற்றும் கொலை செய்தல் ஆகியவற்றை கண்டிப்பதற்கு ஜனநாயக இயக்கங்களுக்கு உரிமையுள்ளது.துரதி~;டவசமாக அவ்வாறான இயக்கங்கள் இன்று அரிது.சாள்ஸ் அபேசேகர போன்றோர் சிவில் சமூக இயக்கங்களில் இல்லாததினால் இன்று மஹிந்த ராஜபக்~ போன்றோரும் எதிர்க்கட்சியில் இல்லை.
பின்னொரு காலத்தில் அமைச்சுப் பதவிகளை பெற்றுக் கொண்டவர்கள் மற்றும் அரசாங்கத்தின் உயர் நிலைகளைக் கொண்ட அரசியல் குழுக்கல் 1983 ஆம் ஆண்டின் பின்னரான காலப்பகுதியில் வடக்கின் ஆயுத இயக்கங்களுடன் இணைந்து தெற்கில் புரட்சி இயக்கங்களை கட்டியெழுப்புவதற்கு முயற்சி செய்தனர்.வடக்கிற்கு சென்று பயிற்களைக் கூட பெற்றுக் கொண்டுள்ளனர்.நிதியைத் திரட்டிக் கொள்வதற்காக கொள்ளைகளிலும் ஈடுபட்டனர்.அவர்கள் 1985 ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இவ்வாறான கடத்தல்களின் மூலமே கைது செய்யப்பட்டனர்.அப்பொழுது சார்ள்ஸ் அபேசேகர தலைமைத்துவத்தின் கீழ் போசனையடைந்த மனித உரிமை அமைப்பு அக்கடத்தல்களை கண்டித்தது மட்டுமன்றி அவர்களுக்கு சட்ட உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசியல் கைதிகளை விடுதலை செய்து கொள்வதற்கான இயக்கம் என்ற பெயரில் பரந்தலவிலான முன்னணியொன்றும் கட்டியெழுப்பியது.
இன்று 'அக்குண" ஊடக செயற்பாட்டாளர்களின் கடத்தலுக்கு எதிராக சுதந்திர ஊடக இயக்கம் வெளிக்காட்டிய எதிர்ப்பு தவறானதென்றோ அல்லது அதற்கும் அப்பால் துரோகமென கருதும் நபர்கள் அந்த வரலாற்றை ஞாபகப்படுத்திக் கொள்ளல் சிறந்ததாகும்.நாம் அதன் அடிப்படையிலே தங்கியிருக்கின்றோம்.
இராணுவத்தைச் சேர்ந்தோர்
மேலும் ஒரு விடயத்தை கூற வேண்டும்.ஊடகவியலாளர்கள் மத்தியில் எல்டிடிஈ ஆதரவாளர்கள் இருக்கிறார்கள் எனக் கூறி ஊடக சுதந்திரத்திற்காக முன்நிற்கும் அனைவரும் பீதியடையும் நிலையிலுள்ளனர். இராணுவத்திற்குள்ளும் அவ்வாறான நபர்கள் இருக்கின்றார்கள் என இராணுவம் தெரிவிக்கின்றதனையும் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.அவ்வாறான குற்றச்சாட்டுக்கள்; முன்வைக்கப்பட்ட சிலர் பின்னர் குற்றவாளிகலள்ள என தீர்மானிக்கப்பட்டதுடன் அதனை ஊடகங்களும் அறிக்கையிட்டன.
ஜனநாயக சமூகமொன்றில் எந்தவொரு பிரஜைக்கும் சட்டத்தின் ஆட்சியின் கீழ் வாழ்வதற்கு உரிமை உள்ளது.குற்றமிருந்தால் நீதிமன்றத்திற்கே முடிவு கூற முடியும்.ஏனையோர்களுக்கு குற்றாடடு;க்களை முன்வைக்க மட்டுமே முடியும்.நீதிமன்னறத்தில் குற்றவாளியாக காணப்படும் வரை குற்றவாளியல்லவென நிரூபிப்பதற்கு எந்தவொரு நபருக்கும் உரிமையுள்ளது.நாம் முன்நிற்பது அந்த உரிமைக்காகவே.அவ்வாறன்றி பயங்கரத்தையோ அல்லது வன்முiறியில் சமூகத்தை பயமுறுத்துதல் அல்லது அழித்தல் ஆகியவற்றுக்காக அல்ல.எவரொருவரினாலும் பயங்கரவாத வன்முறை கையாளப்பட்டால் நாம் அதனை எதிர்ப்போம்.
No comments:
Post a Comment