Tuesday, February 6, 2007

கடத்திச் செல்லப்பட்ட அக்குண பத்திரிகையின் ஊடகவியலாளர்களை விடுதலை செய்


பத்திரிகை வெளியீடு

06.02.2007

'அக்குண" பத்திரிகையின் அலுவலக குழுவினரை கடத்தல்


இலங்கை புகையிரத சங்க சம்மேளனத்தின் 'அக்குண" பத்திரிகையுடன் தொடர்புடைய மற்றும் அதன் செயற்பாட்டாளர்களான பத்திரிகையின் வெளியீட்டாளர் சிசிற பிரியங்கர (38),பக்க வடிவமைப்பாளர் எம்.எல். செனவிரத்ன (35) மற்றும் அதன் செயற்பாட்டாளரொருவரான நிஹால் சேரசிங்ஹ (40) பெப்ரவரி 05 ஆம் திகதி இனந்தெரியாதோரினால் கொழும்பில் வைத்து கடத்திச்செல்லப்பட்டுள்ளதாக சுதந்திர ஊடக இயக்கத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

சிசிற பிரியங்கர கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக புகையிரத சங்க சம்மேளனமும் நிஹால் சேரசிங்ஹ கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான இயக்கமுமம் எம்.எல்.செனவிரத்ன கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக அவருடைய மனைவி மூலமும் சுதந்திர ஊடகம் உறுதி செய்து கொண்டுள்ளது.இது தொடர்பாக முறையே தெமட்டகொட மற்றும் அத்துருகிரியை பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரவு 11.30 மணியளவில் தொலைபேசி அழைப்பொன்றுக்கு பதிலளிப்பதற்கு தாம் பனிபுரியும் இடத்திற்கு சென்ற சிசிற பிரியங்க மீண்டும் திரும்பவில்லை.நிஹால் சேரசிங்ஹ கடந்த 05 ஆம் திகதி மாலை 3.00 மணிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.அவருக்கு இரு குழந்தைகளின் தந்தையாவார்;.(ஆறு வயது மற்றும் ஒரு வயதில்)
அன்றைய தினம் இரவு 9.30 மணிக்கு நிஹால் சேரசிங்ஹ தனது வீட்டிலிருந்து கடத்திச் செல்லப்பட்டுள்ளார்.அவர் ஒரு குழந்தையின் தந்தையாவார்.(ஆறு வயது)

மேலும் அமைச்சர்களின் சம்பளம் மட்டும் அதிகரிப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்த்தில் மனுவொன்றை முன்வைத்து பின்னர் நிராகரிக்கப்பட்ட அடிப்படை மனித உரிமைகள் மனு ஆகியவற்றின் முன்னோடியான செயற்பாடுகளை மேற்கொண்டது இலங்கை புகையிரத சங்க சம்ளேனமாகும்.இக்கைது செய்தல் நடவடிக்கை முற்றிலும் சட்டவிரோதமான முறையிலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.இந்நபர்கள் தொடர்பாக ஏதாவது விசாரணைகள் மேற்கொள்ளப்படவேண்டுமாயின் அது சட்டத்தின் நிர்வாகத்திற்கேற்பவே மேற்கொள்ளப்பட வேண்டுமென சுதந்திர ஊடக இயக்கம் வலியுறுத்துகின்றது.

இந்நபர்கள் அரசாங்கத்தின் மூலம் கைது செய்யப்பட்டிருப்பின் அவர்களது உயிரை பாதுகாக்குமாறும் அவர்களை உடனடியாக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யுமாறும் தேவையான சட்ட உதவிகளை அவர்களுக்கு பெற்றுக்கொடுக்குமாறும் சுதந்திர ஊடக இயக்கம் வேண்டுகோள் விடுக்கின்றது.இவ் சட்டவிரோத கைது செய்தலை உடனடியாக விசாரணைக்கு உட்படுத்துமாறு கோரிக்கை விடுக்கும் சுதந்திர ஊடக இயக்கம் இவ் சட்டவிரோத கைது செய்தலையும் வன்மையாக கண்டிக்கிறது.
அரசு சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுசரணை வழங்கும் இடமாகும்பொழுது நாட்டின் பிரஜைகளுக்கு ஜனநாயகத்தின் பாதுகாப்பு கிடைக்காது போகுமென இச்சந்தர்ப்பத்தில் சுதந்திர ஊடக இயக்கம் சுட்டிக்காட்டுகின்றது.

No comments: