-நாரதர்-
இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு என்ற இலங்கையில் இன்று எந்தளவு அது நிலைத்துள்ளது என்பதனை கேட்குமளவிற்கு அப்பதம் கேள்விக்குறியாகியுள்ளது.அதற்கு ஒரு எடுத்துக்காட்டாகவே திருகோணமலை இன்று திகழ்கிறது.
இனந்தெரியாத ஆயுத குழுக்கல் என்ற பெயரில் படுகொலைகள்,மக்களின் அன்றாட வாழக்கையின் ஓர் அங்கமாக கலந்துள்ள பாதுகாப்பு சோதனைகள்,நித்தமும் நகரில் குவிந்து கிடக்கும் பாதுகாப்பு படையினர்,எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் என்ற அச்சத்தில் உறைந்துபோயுள்ள பொதுமக்கள் என இவ்வாறு அவற்றை பட்டியலிட்டுக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் கடந்த வருடங்களில் விடுதலைப்புலிகளின் அலுவலகங்கள் நகரத்தில் அமைக்கப்பட்டிருந்தன.இன்று அவற்றுக்கு பதிலாக கருணா குழுவினர் அலுவலகங்களை அமைத்துக் கொண்டுள்ளனர்.அவர்கள் வழக்கு விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.அதற்கு பொலிஸ் அதிகாரிகளும் ஒத்துழைப்பும் வழங்கி வருகின்றனர்.இதனை நாம் அங்கு சென்று போது நேரில் காணக்கூடியதாயிருந்தது.’நாம் இங்கு பொதுமக்களின் முறைப்பாடுகளை விசாரணைகள் செய்து வருகின்றோம்.அத்துடன் பொது மக்களுக்கு எதிராக இடம்பெறும் வீதிகளில் இடம்பெறும் துன்புறுத்தல்கள் மற்றும் இடைஞ்சலுக்கெதிரான நடவடிக்கைகளையுமே நாம் மேற்கொண்டு வருகின்றோம்.” என அலுவலகத்தின் அதிகாரியொருவர் தமது கருத்துக்களை தெரிவித்தார்.ஆனால் கருணா குழுவினர் நகரில் பிரபல வர்த்தகர்களிடம் கப்பம் பெற்று வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
ஒரு ஜனநாயக நாட்டின் இறைமையுள்ள அரசாங்கத்திற்கு மட்டுமே ஆயுதப்படையை வைத்திருக்க முடியுமென்று அரசாங்கத்தின் யாப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.அதற்கமைய அரசாங்கத்திற்கு மட்டுமே ஆயுதப்படைகளை வைத்திருக்க முடியும்.அரசாங்கத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து ஆயுதப்படைகளும் சட்டவிரோதமானதென்றும் கூறப்படுகின்றது.இதுவொரு ஜனநாயக விரோத செயற்பாடு.
அதேவேளை விடுதலைப்புலிகள் தமது படையில் சிறுவர்களை சேர்த்து வருவதாக அரசாங்கம் புலிகளை குற்றஞ்சாட்டுகின்றது.ஆனால் கருணா குழுவில் சிறுவயதினையுடைவர்கள் ஆயுதமேந்தி அவர்களுடைய அலுவலகத்தில் பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர் இதனை இதே அரசாங்கம் இன்னும் கண்டுகொள்ளவில்லை.இவர்களுக்கு அதிகாரம் வழங்கியவர்கள் யார்? விடுதலைப்புலிகள் ஆயுதமேந்துகையில் ஜனநாயகவிரோத செயற்பாடென அரசாங்கம் கூக்குரலிடுகையில் கருணா குழுவினர் ஆயுதமேந்தியிருக்கும் வேளையில் அதே அரசாங்கம் மௌனம் சாதித்து வருவதுடன் அனுமதியும் வழங்கியுள்ளது.
தமது சொந்த நலனிற்காக ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டுவதையிட்டு அனைவரும் யோக்கியதர்களாக செயற்படுதலே சிறந்த ஜனநாயகம்.
படங்கள்:-AVG Photo agency
1 comment:
வடக்குக் கிழக்கு முழுக்க திறந்த வெளி சிறைச்சாலைகளாக மாறிக்கொண்டு வருகின்றது. யாழ்ப்பாணத்தில் நிலைமை என்னும் மோசம்.
Post a Comment