சூழலியல் அமைச்சர் சம்பிக்க ரணவக்க சட்டத்திற்கு அப்பாற்பட்ட முறையிலாவது எம்மை கொலை செய்ய வேண்டுமென தற்பொழுது பகிரங்கமாக கூற ஆரம்பித்து விட்டார்.சம்பிக்க ரணவக்க அவர்கள் ஜனாதிபதியின் நெருங்கிய ஆலோசகரென கேதீஸ்லோகநாதனின் இறுதி கிரியைகளில் கலந்து கொண்ட அவரது கட்சியின் முக்கியஸ்ததர் ஒருவரே எமக்கு தெரிவித்தார்.அவ்வாறானதொரு நிலையிலுள்ள ஒருவர் இவ்வாறான கருத்துக்களை வெளிப்படுத்தும் பொழுது அதற்கு உரிய கவனத்தை செலுத்த வேண்டியது எமது கடமையாகும்.அதனாலேயே இக்குறிப்பு எழுதப்படுகிறது.
இவ்வாறு கடந்த வாரம் ராவய பத்திரிகையில் 'தடைகளுக்கு மத்தியில் பிரஜை ஊடகவியலாளரொருவரின் குறிப்புக்கள்" எனும் பத்தியை தொடர்ச்சியாக எழுதி வரும் சுதந்திர ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய ' சூழலியல் (பயங்கரவாத) அரசியல் ' எனும் தலைப்பில் எழுதிய கட்டுரையின் தமிழாக்கத்தினை தினக்குரல் வாசகர்களுக்காக இங்கே பிரசுரிக்கின்றோம்.
கடந்தவொரு தினத்தில் நுகேகொடையில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவரது கட்சியின் முக்கிய நபரொருவர் அழிக்கப்படவேண்டியவர்களின் பெயர் பட்டியலொன்றை வெளிப்படுத்தினார்.
இது புதிய அச்சுறுத்தலல்ல.சம்பிக்க ரணவக்க அவர்களின் 'புலிகளை ஊடறுத்துச் செல்லல் ' (கொட்டி விநி விதீம) என்ற அவர் எழுதிய நூலை வாசித்துப் பார்க்கும் பொழுது புலனடைவது அவருடன் தற்பொழுது அமைச்சரவையில் அமர்ந்திருக்கும் பல அமைச்சர்களை பல்வேறு விதங்களில் புலிகளென குறிப்பிடப்பட்டுள்ளது என்பதாகும்.
முஸ்லிம் காங்கிரஸ்,தோட்ட தொழிலாளர் காங்கிரஸ்,மலையக மக்கள் முன்னணி,சமசமாஜக் கட்சி,கம்யூனிஸ்ட் கட்சி,ஈபிடிபி,புளொட் அமைப்பு என அனைத்து கட்சிகளும் சூழல் அமைச்சருக்கு ஏற்ப புலிகளுடன் தொடைபுடையவர்கள் என்பதனால் அவர்கள் அழிக்கப்பட வேண்டுமென்பதாகும்.அவற்றுல் புளொட்டை தவிர ஏனைய அனைத்து கட்சிகளும் தற்பொழுது அமைச்சு சபையிலே இருக்கின்றன.
அதே போல் ஊடகப் புலிகள் இடதுசாரி புலிகள் மற்றும் சமாதான புலிகள் என அமைச்சர் உட்பட அமைச்சர் தலைமை வகிக்கும் இயக்கங்கள் மூலம் குறிப்பிடப்படும் நபர்கள் அழிக்கப்படவேண்டுமென கொழும்பின் மதில்களில் ஒட்டபட்டுள்ள சுவரொட்டியில் மற்றும் அவர் ராவயவிற்கு தெரிவித்த கருத்துக்கள் சம்பிக்க ரணவக்கவின் நூலினை அடிப்படையாக வைத்தே குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன் சில பிரிவுகளை ராவயவின் வாசகர்கள் தெரிந்துகொள்ளுவதற்கு எடுத்துக்காட்டுதல் சிறந்ததாகும்.
தமிழ் மக்களின் பிரச்சினைகள் பற்றி பேசும் அனைவரும் புலிகளின் ஆதரவாளர்கள் என சுட்டிக்காட்டும் சம்பிக்க ரணவக்கவின் அடிப்படை இதுவாகும்.
' முதலவாது மாயை யாதெனில் தமிழ் மக்கள் மற்றும் புலிப் பயங்கரவாதம் என இரு விடயங்கள் இருக்கின்ற போதிலும் அதே போல் புலிப்பயங்கரவாதத்திற்கு தமிழ் மக்களால் வழங்கும் ஒத்துழைப்பை நிறுத்த வேண்டுமெனில் தமிழ் மக்களின் தேவைகளையும் அபிலாi~களையும் பூர்த்தி செய்தல் வேண்டும் என்பதாகும். '
தமிழின் துன்பங்கள் பிரயோசனப்படுவது புலிகளின் படுகொலை செயற்பாடுகளுக்கே. தமிழ் என்ற பெயரில் வழிநடத்தப்படுவது புலிகள் அமைப்பைச் சேர்ந்த தமிழன்களுக்கும் அவர்களைக்; கொண்ட தமிழ் சமூகத்திற்கு மட்டுமே.
தமிழ் மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகளையும் நெருக்கடிகளையும் நியாயப்படுத்துவது இவ்விதத்திலேயாகும்.
ஹிட்லர் உருவாகியதற்கு ஜேர்மனி சமூகம் நஷ்ட ஈட்டை செலுத்தியது போல் பிரபாகரனை உருவாக்கியதற்கு தமிழ் சமூகமும் நஷ்ட ஈட்டை செலுத்த வேண்டும்.
எந்தவொரு அரசியல்வாதிக்கும் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு உரிமையில்லாத அதேவேளை அதனை தடுப்பது அனைத்து பிரஜைகளினதும் தேசிய கடமையாகும் என்பதாகும்.
தமிழ் மொழி ஊடகங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள தடைக்கு காரணம் கற்பிப்பது இதனடிப்படையிலாகும்.
கொழும்பு மற்றும் கண்டி தமிழ் மக்களை இலக்காகக் கொண்ட இரு தொலைககாட்சி அலைவரிசைகளும்;;; வானொலி சேவைகள் இரண்டும் வேகமாக பரவியுள்ள மூன்று பத்திரிகைகள் உட்பட பல பத்திரிகைகள் இருப்பதுடன் அவை நேரடியாக புலிகள் அமைப்பின் கொள்கையினை பிரச்சாரப்படுத்துகின்றது.
1987 ஆம் ஆண்டிற்கு பின் கொழும்பிற்கு வந்த தமிழ் மக்களை அவதானிக்கப்பட வேண்டுமென இவ்வாறு குறிப்பிடப்படுகிறது.
முக்கியமாக 1987 ஆம் ஆண்டிலிருந்து வருகைதந்த தமிழ் குடியேற்றவாசிகளின் மூலம் சம்பிரதாயபூர்வ மக்களிடமிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட சொத்துக்களை மீளப்பொற்றுக்கொள்ளலாகும்.இது தொடர்பில் கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாவிடில்..
அமெரிக்கா மற்றும். எல்ரிரிஈ தொடர்பாக
இந்திய ராஜிவ் காந்தி படுகொலை ஆணைக்குழு குறிப்பிடும் விதத்திற்கு ஏற்ப புலிகள் அமைப்பு ஐக்கிய அமெரிக்க உளவுப் பிரிவுடன் தொடர்புடையதாகும்.திருகோணமலை துறைமுகத்தை புலிகளுக்கு பெற்றுக்கொடுப்பதற்கு உடன்படிக்கையொன்றுக்கும் கட்டுப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.இதற்கும் மேலதிகமாக பிரித்தானிய உளவுப் பிரிவுடனும் பாகி~;தான் உளவுப்பிவிவுடனும் தொடர்புகளை வைத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
(புலி) அமைச்சு சகாக்கள் பற்றி
சந்திரசேகரன் மற்றும் தொண்டமான் தற்பொழுது வெளியிட்டுள்ள கொள்கைப் பிரகடனத்தில் மலைநாட்டு மற்றும் செங்கடகலை பிரதேசம் இந்திய தோட்ட தமிழர்களின் தாயக பூமியென தெரிவித்துள்ளனர்.முதலில் சனத்தொகையை அமைத்துக்கொண்ட அவர்கள் பின்னர் நிலத்தையும் வெற்றிகொண்டுள்ளனர்.அடுத்தாக கொள்கையையும் வரலாற்றையும் உருவாக்கிக் கொண்டு செல்வர்.இறுதியில் யுத்தம் மற்றும் தனிராச்சியத்தை நோக்கி வருவர்.
முன்னாள் போராட்ட இயக்கமென கூறிக்கொள்ளும புளொட்,ஈபிஆர்எல்எவ்,ஈபிடிபி,டெலோ அமைப்புக்களும் தமிழர் விடுதலை கூட்டணி தொடர்பான யதார்த்தை தற்பொழுதாவது இலங்கை சமூகம் புரிந்துகொள்ளல் வேண்டும்.புலிப் பயங்கரவாதிகள் குறைநிரப்பாகசெயற்படும் இவ் சேற்று நிறத்தைக்கொண்ட புலிகள் அமைப்பை தடுத்தல் அமைதியான இலங்கைக்கு அத்தியவசியமான நிபந்தனையாகும்.
தமிழ் இனவாதிகளின் புலிப்பயங்கரவாதிகளுக்கு உதவியாளர்களாக செயற்படும் தெற்கின் சில சேற்று நிறம் கொண்ட கூட்டங்களும் வாழ்ந்து வருகின்றன.லங்கா சமசமாஜக் கட்சி மற்றும் இலங்கை கம்யூனிஸ்ட் கட்சிகள் போன்றன.
முஸ்லிம் அரசியல் பற்றி..
முஸலிம் குண்டின் சேவ நூலிற்கு அ~;ரப் தீ வைத்துள்ளார்.தற்பொழுது முஸ்லிம் இனவாத கொள்கையொன்றும் அரசியலும் எழும்பியுள்ளதுடன் அவ் நிலையில் அதற்கு பெரும்பாலும் யுத்த முன்னெடுப்புகளும் இணைத்துக் கொள்ளப்படும்.
அதற்கேற்ப அடுத்த நூற்றாண்டின் நிலைமை இதுவாகும்.அப்படியாயின் 1994 ஆம் ஆண்டு 13 லட்சமாக இருந்த முஸலிம்களின் சனத்தொகை நூறு வருடத்தில் 300-400 லட்ச சனத்தொகையைக் கொண்ட இலங்கையில் நாட்டின் சனத்தொகையில் 55 சதவீதத்தினைக் கொண்ட சனத்தொகையாக முஸலிம் சனத்தொகையைக் கொண்டதாக இலங்கை காணப்படும்.
ஆசியாவில் போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கடத்தல்களின் ஆட்சியாளர்களாக இஸ்லாமிய அடிப்படைவாதிகளாக மாறியுள்ளனர்.இதற்கமைய இலங்கையின் மோதலுக்கு நிதி மற்றும் மனிதர்களை அனுப்புவதற்கு இஸ்லாமிய சகோதரர்கள் முன்வந்தாலும் அதில் வியப்பதற்கு ஒன்றும் இல்லை.
அரச சார்பற்ற நிறுவனங்கள் தொடர்பாக மஹிந்த ராஜபக்~ அரசாங்கம் செயற்படுவது சம்பிக்க ரணவக்க அவர்கள் இப்புத்தகத்தில் தெரிவித்துள்ள பரிந்துரைகளுக்கு அமையவே.அரச சார்பற்ற நிறுவனங்களை முழுமையாக கட்டுப்படுத்தப்படல் வேண்டுமென்பது சூழல் அமைச்சரின் கருத்தாகும்.தமிழ் சமூகம் தொடர்பாக தமிழ் தொடர்பாகவும் செயற்படுத்தப்படுவதும் இந் நூலில் குறிப்பிடப்படுள்ள பரிந்துரைகளுக்கு அமையவாகும்.
மேலும் இவ் எழுத்தாவணத்திற்கு அமைய சூழல் அமைச்சர் மற்றும் ஜனாதிபதி ஆலோசகர் சம்பிக்க ரணவக்க அவர்களுக்கேற்ப பலர் அழிக்கப்படவேண்டியுள்ளனர்.இவர்களில் சிலர் இருப்பது தற்பொழுது இவர் இருக்கும் அமைச்சரவையிலாகும். அப்போராட்டத்தையும் தாமதமின்றி ஆரம்பிப்பதற்கு அவகாசம் உள்ளது.
அவர்கள் மற்றும் அவர்களது சகாக்கள் எம்மை வாழ்வதற்கு இடமளித்தால் அப்போராட்டம் முடிவுறும் விதத்ததை பார்ப்பது புதுமையானதாக இருப்பதற்கு இடமுண்டு.
தினக்குரல் 11.03.2007
No comments:
Post a Comment