Picture by S.Thushan
by.S.Nayanaganeshan
நாட்டின் அதிபர் முதல் சாதாரண அரச அதிகாரி வரை இவர்கள் அனைவரும் கொண்டுள்ள போர் மனோபாவத்தை நோக்கும் பொழுது நாட்டில் முழு அளவிலான போர் மூண்டுவிட்டதோ என எண்ணத்தோன்றுகிறது.
இதற்கு ஒரு சான்றாக கடந்த 24 ஆம் திகதி சனிக்கிழமை இரவு 9.30 மணிக்கு ருபவாஹினி தேசிய தொலைக்காட்சி சேவையில் ஒலிபரப்பான ' ஜனபதி ஹமுவ ' என்ற ஜனாதிபதி சந்திப்பின் போது ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்வியொன்றுக்கு பதிலளித்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்~ 'புரிந்துணர்வு உடன்படிக்கை இருந்தாலும் சரி இல்லாவிட்டாலும் சரி அதைப்பற்றி எனக்கு எதுவித தேவையுமில்லை" என வசைமாறியதை அனைவரும் பார்த்து கேட்டிருப்பின் அதனை எவரும் இலகுவில் மறக்கமாட்டார்கள்.
ஆவணமாக கிழியாத கடதாசியாகவும் அழிந்து போன எழுத்துக்களாகவும் திகழ்கின்ற புரிந்துணர்வு உடன்படிக்கையைப் பார்த்து நாட்டின் அதிபரே அவ்வாறு கூறுகையில் நாட்டில் தற்பொழுது வடகிழக்கில் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் பிரகடனப்படுத்தப்படாத போர் எந்தளவு தூரம் முழு அளவிலான போருக்கு தன்னை அது சுதாகரித்துக் கொண்டுள்ளது என்பதனை விளங்கிக்கொள்வதொன்றும் கடினமான விடயமல்ல.
அந்த வகையில் கடந்த வாரம் கொழும்பின் பல புறங்களில் யுத்தத்திற்கு ஆதரவாகவும் சமாதானத்திற்கு ஆதரவாக செயற்படுபவர்களை நாட்டிற்கு குந்தகத்தை விளைவிக்கக்கூடியவர்கள் என குறிப்பிட்டு ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டிகளைப்பற்றி இங்கு குறிப்பிட்டிருந்தோம.;அந்த வகையில் அதற்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் ஜனாதிபதியின் புகைப்படத்துடன் வாகரையில் விடுதலைப்புலிகளுடனான சமரில் வெற்றி வாகை சூடிய இராணுவ வீரர்களுடன் பலத்த புன்னகையுடன் அளாவுலாவும் புகைப்படத்துடன் கூடிய சுவரொட்டிகள் கொழும்பின் எல்லா இடங்களிலும் தற்பொழுது காணக்கூடியதாயுள்ளது.
அச்சுவரொட்டியில் குறிப்பிட்டிருந்ததாவது
' கொலைகார புலிகள் அழிந்து விட்டனர்
புலியின் வால் தடுமாற்றத்தில்
முடிவு சரியானதே,
ஜனாதிபதி அவர்களே தொடர்ந்து செல்வோம் '
- நில் படையணி-
என்பதே அச்சுவரொட்டியின் மூலம் கூறப்பட்டிருந்த தகவல்.
இன்று தெற்கில் ஒரு காட்டுத்தர்பார் போன்ற போக்கே தலைதூக்கியுள்ளது.அந்த வகையில் எவர் சமாதானத்தைப் பற்றி பேசினாலோ அவர் ஒரு புலி,எவர் போரை விமர்சிக்கின்றாரோ அவர் ஒரு தேசத்துரோகி.நியாயமற்ற முறையில் இனவாத அடிப்படையில் இப்படியான குழுக்கலினால் மேற்கொள்ளப்படும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் கருத்துச் சுதந்திரத்திற்கே வழியில்லாமல் பன்னிவிடும் அது.இன்று மௌனம் சாதிக்கும் அனைவரும் வேதனைப்படுவர்.
எவரும் தமது வெற்றியை கொண்டாடுவதற்கும் அனுபவிப்பதற்கும் உரிமையுண்டு.அதேவேளை அவை ஏனைய சமூக இனத்தவர்களை புன்படுத்தாத வகையிலும் அச்சுறுத்தாத வகையிலும் அதனால் வேறு விளைவுகள் ஏற்படாத வகையில் தமது வெற்றியை கழிப்புறல் வேண்டும்.
அண்மைக்காலங்களில் கொழும்பு சுற்றுப்புறங்களில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டிகளின் பின்னணி அவை எதனடிப்படையில் ஒட்டப்பட்டுள்ளதென்றால் அவை சமாதானத்திற்கு ஆப்பு வைப்பதாகவே அவை அமைந்துள்ளன.
நூற்றுக்கனக்கான புல்லட்டுகளை தாங்கிய இராணுவ வீரர்களின் மத்தியில் மிகுந்த மகிழ்ச்சியுடன் காணப்படுகின்றார் ஜனாதிபதி.இதனால் உணர்த்தப்படுவது யாது யுத்தம் என்பதாகும்.அப்படியாயின் இலங்கையில் சமாதானம் உயிர்துறந்து கொண்டிருக்கின்றது என்பதாகும்.
இன்று சமாதானத்திற்கான சகல வழிகளும் மூடப்பட்டு விட்டதென்றே எண்ணத்தோன்றுகிறது.
ழ நாட்டின் இனப்பிரச்சினையை தீர்ப்பதற்கு ஜனாதிபதியினால் அமைக்கப்பட்ட சர்வகட்சி மகாநாடு செயலிழந்துள்ளது.ழ போர் நிறுத்த உடன்படிக்கையைப் பற்றி எந்தவித உத்தரவாதமுமில்லை.ழ போர் நிறுத்த கண்கானிப்பக் குழுவின் செயற்பாடுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.ழ சர்வதேச சமூகம் அமைதிகாக்கின்றது.ழ நோர்வே சமாதான தூதுவர்கள் இடையிடையே முகம் காட்கின்றனர்.ழ வடக்கு கிழக்கில் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு மத்தியில் வாழ்கின்றனர்.ழ தலைநகரிலும் ஏனைய புறங்களிலும் தமிழ் மக்கள் நிம்மதியாக வாழ முடியாத நிலையில் அவர்கள் மீது பாதுகாப்பு கெடுபிடிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இவ் 'நில் படையணி" என்ற பெயரில் ஒட்டப்பட்டுள்ள சுவரொட்டி மேற்கூறப்பட்ட விடயங்களையா உணர்த்துகின்றது? அப்படியாயின் இச் சுவரொட்டி நியாயமானதென அரசாங்கம் கருதுமாயின் சுவரொட்டிக்கு அமைய ஜனாதிபதி அதே வழியில் செல்லுங்கள் தமிழர்கள் அதலபாதாளத்தை நோக்கிச் செல்வதை தடுக்கமுடியாது போகும்.
No comments:
Post a Comment