அதிமேதகு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
அதிமேதகு பிரதமர் ரத்னசிறி விக்ரமநாயக்கஇலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு
பரமேஸ்வரியை விடுதலை செய்யுங்கள்
பயங்கரவாத புலயனாய்வு பிரிவினரால் கடந்த 60 நாட்களாக கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ள மௌபிம பத்திரிகையின் ஊடகவியலாளர் முனுசாமி பரமேஸ்வரியை (23) உடனடியாக விடுதலை செய்யுமாறு கோருவதற்கான பிரச்சாரத்தின் சார்பாக நான் அல்லது எனது நிறுவனம் உங்களுக்கு இந்த கடிதத்தை எழுதுகின்றோம்.சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமும் சுதந்திர ஊடகவியலாளர் சம்மேளனமும் இணைந்து ஆரம்பித்துள்ள மேற்குறிப்பிட்டுள்ள பிரச்சாரத்தினை நாம் ஆதரிக்கின்றோம்.
பரமேஸ்வரி பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கடந்த வருடம் 2006 நவம்பர் மாதம் 26 ஆம் திகதி முதல் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.விடுதலை புலிகளுடன் தொடர்பு வைத்துள்ளார் என்ற சந்தேகத்தின் பேரிலே கைது செய்து தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.இதுவரை அவருக்கெதிரான எந்த ஒரு குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படவில்லை.இதுவரை அவரை சட்டத்தரணிகளுக்கோ அவரது ஆசிரியருக்கோ ஊடக நிறுவனங்களுக்கோ அவரை சந்திப்பதற்கு அனுமதி வழங்கப்படவில்லை.
23 ஆம் திகதி ஜனவரி நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு மேலும் 30 நாட்களுக்கு விசாரணையின்றி தடுத்து வைப்பதில் பயங்கரவாத பிரிவினர் வெற்றி கண்டுள்ளனர்.இது மிகவும் வெட்கக் கேடான நிலைமை.ஒரு பெண் பத்திரிகையாளரின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டு அவர் தடுப்பு காவலில் வாடுவதை உங்களுடைய அரசாங்கம் எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
இந்த பயங்கரமான சம்பவமானது ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமைகளுக்கு பாரதூரமான விளைவுகளை கொண்டிருக்கிறது.
தமிழ் சமூகங்கள் தொடர்பான விவகாரங்களை அறிக்கையிடுவது தொடர்பில் பரமேஸ்வரி மிகவும் அறியப்பட்ட ஒருவர்.கொழும்பில் காணமால் போனவர்கள் பற்றியும் அவர் புலனாய்வு செய்திகளை வெளியிட்டுள்ளார்.அவரின் நடுநிலைமையான ஊடகவியல் மற்றும் அவருக்கெதிராக ஆதாரமற்ற வகையில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்களின் பின்னணியிலும் சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனமானது மீண்டுமொரு முறை இந்த அவசரகால ஒழுங்கு முறைகள் (பயங்கரவாத தடை மற்றும் தடுப்பு மற்றும் குறிப்பிடப்பட்ட பயங்கரவாத செயற்பாடுகள்) அவை ஊடகத்தை அடக்குவதற்கும் சுதந்திரமான குரல்களை நசுக்குவதற்கும் து~;பிரயோகப்படுத்தப்படுவதாக தனது கவலைகளை வெளியிடுகிறது.
எந்தவிதமான குற்றச்சாட்டுக்களும் முன்வைக்கப்படாமலும் இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகள் அவரை எந்தவிதமான பயங்கரவாத செயற்பாடுகளுடனும் தொடர்புபடுத்த தவறிய நிலைமையிலும்; அவரை விடுதலை செய்ய அரசாங்கம் தலையிடுமாறு அரசாங்கத்தை சர்வதேச ஊடகவியலாளர் சம்மேளனம் வலியுறுத்துகிறது.
பத்திரிகை சுதந்திரம் மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றின் பெறுமதிகளை அரசாங்கம் உணர்ந்து கொள்வதாக காட்டுவதற்கும் பரமேஸ்வரியை உடனடியாக விடுதலை செய்வதற்கும் இது பொறுத்தமான நேரம்.
உண்மையுள்ள.
ஜனாதிபதி அலுவலகம் தொலைநகல் : 0112424840 , 0112333717
- பிரதம மந்திரி அலுவலகம் தொலை நகல் : 0112575454
No comments:
Post a Comment