Monday, January 1, 2007

ஏமாற்றத்தில் வரலாறு காணும் மலையக மக்கள்

எஸ்.நயனகணேசன்

'எங்களுக்கு 300 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தராவிட்டால் இறுதி வரை
நாங்கள் வேலைக்கு போகமாட்டோம். நாம் இன்று மிகுந்த க~;டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகிறோம்.அரசாங்கமும் தோட்டக்கம்பனிகளுமே இவ் சம்பள உயர்வை எமக்கு பெற்றுத்தரவேண்டுமென" குருணாகல் மாவட்டத்தில் அமைந்துள்ள கெப்பிட்டிகலை தோட்டத்தைச் சேர்ந்த பெண் தொழிலாளியான பி.சரோஜா (42) இவ்வாறு தமது வேதனையை வெளிப்படுத்தினார்.
கடந்த 14 ஆம் திகதி மாவத்தகமை பிட்டியகந்தை தோட்டத்தில் சம்பள உயர்வு கோரி நடைபபெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் சுமார் ஒன்பது தோட்டங்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.அவை பிட்டியகந்தை,முவான்கந்தை,நொட்டிங்ஹில்,மொறத்தன்னை,கொக்காவத்தை,பிளஸ்ஸ,கெப்பிட்டிகலை,மாலம்பே,புகையிலைமலை ஆகிய தோட்டங்களைச் சேரந்த சுமார் 500 ற்கும் தோட்டத் தொழிலாளர்கள் இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
கடந்த 13 நாட்களாக, இலங்கையில் அமைந்துள்ள அனைத்து பெருந்தோட்டங்களும் 300 ரூபா சம்பள உயர்வு கோரிக்கையை முன்வைத்து வேலை நிறுத்த போராட்டத்தில் குதித்துள்ளன.தொழிற்சங்கங்களும் தொழிலாளர்களும் செவ்வனே தமது வேதன உயர்வுக்காக போராடிக்கொண்டிருக்கும் அதேவேளை முதலாளிமார் சம்மேளனம் தமது பிடிவாத போக்கிலிருந்து விடாப்பிடியாக இருந்து வருகின்றமை மிகவும் வருத்தத்திற்குரிய விடயமாகும்.
தற்போதைய சூழ்நிலையில் தோட்டத்தொழிலாளர்கள் 160 ரூபாவினை அடிப்படைச் சம்பளமாகப் பெற்று மிகுந்த க~;டத்திற்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.இந்நிலையிலே தோட்டத்தொழிலாளர்கள் தமது வாழ்க்கைத்தர உயர்வுக்காகவும் ஏனைய சமூகத்தவர்களினைப் போன்று வாழ்வதற்காகவுமே 300 ரூபா சம்பள உயர்விற்காக போராடி வருகின்றனர் என்றால் அதில் தவறில்லை என்பதே அனைவரினதும் வாதமாகும்.
மேலும் அப்பெண் தொழிலாளி கருத்துத் தெரிவிக்கையில் 'நான் கடந்த 24 வருடங்களாக இறப்பர் தோட்டத்தில் வேலை செய்து வருகின்றேன்.இதுவரை காலம் கை நிறைய சம்பளம் பெற்றதில்லை.என்று தான் நாமும் சுகபோக வாழ்க்கையை அனுபவிப்பது."
'நாங்கள் தற்பொழுது பெறும் சம்பளம் எமது வாழ்க்கைத் தரத்திற்கு எவ்விதத்திலும் பொறுத்தமற்றது.அரசாங்கமும் தோட்டக்கம்பனிகளும் தோட்டத்தொழிற்சங்களும் எமக்கு இவ் சம்பள உயர்வை பெற்றுத்தருவதற்கு முன்வரவேண்டும்.எமக்கு இவ் சம்பளத்தை பெற்றுத்தராவிட்டால் இறுதி வரை நாம் வேலைக்கு செல்லமாட்டோம்" என அவர் அங்கலாய்த்து கொண்டார்.
இவ் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட கே.பாலசுந்தரம் (42) என்ற தொழிலாளி கருத்துத் தெரிவிக்கையில் 'நாங்கள் கடந்த 10 நாட்களாக சம்பள உயர்வு போராட்டத்தில் குதித்துள்ளோம்.இப்பொழுது எமக்கு இவ் 300 ரூபா சம்பள உயர்வினை பெற்றுக்கொள்வதனைத் தவிர வேறு வழிகள் இல்லை.ஏன் இவர்கள் எமக்கு இந்த அநியாயத்தை செய்கின்றனர்.நாம் நினைக்கின்றோம் இவ் சம்பள உயர்வு போராட்டத்தை எம்மால் வெற்றிகரமாக அமைத்துக் கொள்ள முடியுமென்று.தற்பொழுது தொழிற்சங்கள் அனைத்தும் எம்மை பட்டினிப்போட்டு வீதியில் இறக்கி விட்டு எம்மீது பழியை போட்டு விட்டு எம்மை ஓரங்கட்டி விட்டுள்ளனர்.இவ்வாறான பிளவுகள் காரணமாகவே தொழிலாளர்களின் உரிமைகளை எம்மால் இதுவரை வெற்றி கொள்ள முடியாதுள்ளது.இனிமேலும் தொழிற்சங்கள் எம்மை பகடைக்காள்களாக்குவதை விட்டு விட்டு நாமனைவரும் ஒன்றாக போராட முன் வரவேண்டுமென" அத்தொழிலாளி தொழிற்சங்கள் மீது தமது விசனத்தை தெரிவித்துக் கொண்டார்.
உண்மையில் இலங்கையின் பெருந்தோட்டத்துறைக்குப் பெற்றுக்கொடுக்கப்படடுள்ள சம்பள உயர்வு வரலாற்றினை நோக்கினால் 1927 ஆம் ஆண்டு ஒரு நாட் சம்பளம் 29 சதத்தினால் அதிகரிக்கப்பட்டு 1992 ஆம் ஆண்டு 56 ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட்டு ஒரு நாட் சம்பளமாக 72 ரூபா 24 சதம் வரை வழங்கப்பட்டதுடன்; 1996 ஆம் ஆண்டு 83 ருபாவாகவும் 1998 ஆம் ஆண்டு 95 ரூபாவாகவும் 2001 ஆம் ஆண்டு 101 ரூபாவாகவும் 2002 ஆம் ஆண்டு 121 ரூபாவாகவும் 2004 ஆம் ஆண்டு 135 ரூபாவாகவும் ஒரு நாட் அடிப்படைச்சம்பளமாக வழங்கப்பட்டு வந்துள்ளதனை காணக்கூடியதாயுள்ளது.
அதேவேளை அவ் அடிப்படைச் சம்பளத்துடன் ஒப்பிடுமிடத்து அரசாங்கத்திற்கு சொந்தமான (துநுனுடீ) தேயிலைத் தோட்டத்தொழிலாளியொருவருக்கு மாதம் 26 நாட்கள் தொழில் தோட்டத்தில் வேலை செய்தால் கிடைக்கும் மொத்த சம்பளம் 3510 ருபவாகும்.அவ் மொத்த சம்பளத்துடன் கொடுப்பனவுகள் இணைந்து 1742 ரூபா மேலதிகமாக கிடைக்கின்றன.ஆக மொத்தம் 5252 ரூபாவாகும்.இவ் மொத்த சம்பளத்தில் 229 ரூபா 50 சதம் ஊழியர் சேமலாப நிதிக்காகவும் 1150 ரூபா முற்பணத்திற்காகவும் 45 ரூபா தொழிற்சங்க சந்தாவிற்காகவும் தேங்காய் அல்லது தேயிலை பெற்றிருப்பின் 4 ரூபாவும் 50 ரூபா ஊழியர் சேம நலனிற்காகவும் 20 ரூபா சலவைக்காகவும் காணிக்கடன் 537 ரூபா 50 சதமாகவும் (பதினைந்து வருட கழிவு அடிப்படையில்) கழிக்கப்பட்டு இறுதியில் எஞ்சுவது 3216 ரூபாவாகும்.
இன்று சாதாரணமாக அறுவர் கொண்ட குடும்பமொன்றிற்கான மாதாந்த செலவு பதின்மூவாயிரத்தினையும் அதிகரித்துச் செல்கின்றது.ஆனால் இருவர் வேலை செய்யும் தோட்டத்தொழிலாளியொருவரின் குடும்பம் பெறும் மாதாந்த மொத்த மொத்தச் சம்பளம் 6432 ரூபவாகும்.இந்தளவு இக்கட்டான சூழ்நிலையில் வாழும் தோட்டத்தொழிலாளர்களுக்கே 300 ரூபா சம்பளத்தினை பெற்றுக்கொடுப்பதில் முதலாளிமார் சம்மேளனம் முரண்டு பிடித்து வருகின்றன.
உண்மையில் தோட்டத்தொழிலாளர்களின் சம்பள உயர்வு கோரிக்கை நியாயமானது தான்.தொழிற்சங்கங்கள் நினைத்தால் பத்து லட்சத்திற்கும் அதிகமான தோட்டத் தொழிலாளர்களிடமிருந்து பெறப்படும் சந்தாப்பணத்திலிருந்து கூட இவ் சம்பள உயர்வை பெற்றுக் கொடுக்க இயலும். ஆகையால் முதலாளிமார் சம்மேளனம் தொழிலாளர்களின் க~;டத்தினை உணரந்து இவ் சம்பள உயர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டுமென்பதே அனைவரினதும் அவாவாகும்.
இன்று இவ் தொழிற்சங்க போராட்டத்தில் நாண்கு பிரதான தொழிற்சங்க கூட்டமைப்புக்களாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்,லங்கா தேசிய தோட்டதொழிலாளர் சங்கம்,பெருந்தோட்டத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பு ஆகியவற்றில் பன்னிரெண்டு தொழிற்சங்கங்கள் உள்ளடங்களாக இவ் வேலை நிறுத்தப் போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றன.
அதேவேளை தொழிற்சங்க தலைவர்கள் இன்று போட்டியடிப்படையில் கோரிக்கைகளை முன்வைத்து வருகின்றனர்.135 ரூபா சம்பள உயர்விலிருந்து 250 ரூபா சம்பள உயர்வை பெற்றுத்தருவதாக அதாவது 100 வீதம் பெற்றுத்தருவதாக பாராளுமன்ற உறுப்பினர் பெ.சந்திரசேகரன் தலைமையிலான தொழிற்சங்கம் கூறுகின்றது..இது எவ்விதத்திலும் சாத்தியமற்றது.ஏனெனில் இதுவொரு தொழிற்சங்க போராட்டம்.பொருளாதாரத்திற்கான போராட்டம்.எந்தவொரு சம்பள உயர்வு போராட்டத்திலும் 100 வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டதில்லை.அப்படி இலங்கையில் ஜனாதிபதிக்கு மட்டுமே நூறு வீத சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.வேறு எவருக்கும் வழங்கப்பட்டில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தற்போதைய சூழ்நிலையில் தொழிற்சங்கங்கள் பிளவுப்பட்டுள்ள நிலைமையினை காணக்கூடியதாயுள்ளது.இவற்றின் வெளிப்பாடுகளே தொழிற்சங்க அமைப்புகளின் பத்திரிகையாளர் மகாநாடுகளை நாம் நோக்கக்கூடியதாயுள்ளது.
இன்று இவ்வளவு போராட்டங்களுக்கு மத்தியில் 170 ரூபா அடிப்படைச் சம்பளமும் 90 ரூபா கொடுப்பனவாக மொத்தம் 260 ரூபா வழங்குவதற்கு முதலாளிமார் சம்மேளனம் சம்மதித்துள்ளன. இவற்றில் 20 ரூபா நிரந்தர கொடுப்பனவாகவும் வரவு 75 சதவீதமாகவிருப்பின் 70 ரூபாவாகவும் வழங்கப்படவுள்ளன.இது ஒரு வகையில் வரவேற்கக்கூடியதாயிருப்பினும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தோட்ட தொழிலாளர்களுக்கு கோரப்பட்ட சம்பள உயர்வு வழங்கப்பட்டதற்கான சரித்திரம் இருந்ததில்லை.
இவ் சம்பள உயர்வு ஒப்பந்தத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் சார்பில் ஆறுமுகம் தொண்டமான் பெருந்தோட்டத்துறை தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் எஸ்.ராமநாதன் மற்றும் தேசிய தோட்ட தொழிலாளர் சம்மௌனம் சார்பில் க.வேலாயுதம் ஆகியோர் கையொப்பமிட்டனர்.முதலாளிமார் சம்ளேனம் சார்பில் லலித் ஒபேசேகர மற்றும் கோடாபய திசாநாயக்க ஆகியோர் ஜனாதிபதி முன்னிலையில் கையொப்பமிட்டனர்.

No comments: