Tuesday, March 25, 2008

சங்கீத வாணி



உன்
நாணம் கொண்ட
நயனங்கள் - என்மீது
ஈரங் கொண்டன.


 ----

தனிமை இனிமையானது
இரவு சுகமானது
நிலவு உறவானது
கவிதை நட்பானது.

 ----

நட்புக்கான ஈரமோ....?
காதலுக்கான வரமோ...?
உன் கண்களில்....

 ----

அந்த
ஓரப்பார்வைகளின்
அர்த்தம் தெரியவில்லை,
இருந்தாலும் - என்மனது
அலாதிக் கொள்கிறது
ஆராதிக்கவும் செய்கிறது.


 ----


பல நூறு
கற்பனை பட்டைகளில்
மனது ஒப்பனை போட்டு
நடந்து செல்கிறது.
என் நினைவு பூமியில்
ஓயாமல்,
கவிதைப் பூக்கள்
பூத்துக் கொண்டேயிருக்கின்றன.


 ----

என்
மனசுக்குள்
மார்கழி கூதல்.
நயாகராவின் சாரல் - உன்
நயனங்களிலோ....?

 ----

மனசுக்கு
விழுதுகள் முளைத்தன.
உன் விழிகள்
எதைத் தான் விதைத்ததோ....?


 ----


ஒவ்வொரு
அந்தி வானமும்
தந்தி கொடுக்கிறது,
இதயத்திற்கு.
துண்டு மேகங்களோடு
பயணிக்கிறது,
முத்திரை ஒட்டிய – உன்
ஈரவிழிகள்முகவரிகள் தரவில்லை,
எங்கு போய் சேருமோ....?
என் இதயம்.

 ----

வசப்பட்ட கற்பனைகளை
ஒப்பனை போட்டு,
நிலவுக்கு கடிதம் எழுத கூட
தோன்றுகிறது.


 ----


இனந்தெரியாத
இரகசிய உணர்வுகள்
என்னை தாலாட்டிக் கொண்டே
இருக்கின்றன.


 ----


எல்லா
உணர்வுகளும்
படுக்கையறை இரகசியமாய்
மனதறைக்குள்
இரகசியமாய் இருக்கின்றன.


 ----


உன்
நாணம் கொண்ட
நயனங்கள் - என்மீது
ஈரங்கொண்டதனால்.


Che

1 comment:

இளைய அப்துல்லாஹ் said...

அடேய் ஓகே அப்பிடியா உன்ரை கனவுக்கன்னியை (கனவுக்கன்னி = இரவில் பபடுக்கும்போது தலைகுப்புற நினைப்பவள்) தூக்கி விட்டு வேறு ஆட்டிஸ்க்கான படம் போடு கவிதைக்கு அது பொருத்தமாயில்லை.