
சில நாட்களுக்கு முன்னர் கவியரசு கண்ணதாசனின் அருமையான வரிகள் சிலவற்றை படித்தேன்.'மனிதன் கண்ணாடியை படைக்காவிட்டிருந்தால் காதலில் பாதி குறைந்திருக்கும் கண்களை மட்டும் கடவுள் படைக்காவிட்டிருந்தால் காதல் எவ்வளவு புனிதமாயிருந்திருக்கும் என்பதே அவை.
எனக்கு காலம் தாழ்த்தி அதிஸ்டம் வாய்ப்பது என்பதனை நான் பெற்று வந்த வரம் என நினைக்கின்றேன்.தாமதமாய் ஒரு தையல் மீது மையல் கொள்ள எனக்கேற்பட்ட விருப்பே அது.
அவள் பற்றி என்னுல் எழுந்த உணர்வுகளை படைக்க மொழி தெரியாமல் எந்தளவு விழி பிதுங்குகின்றேனோ அந்தளவு அவளை முதல் தடைவையாக உற்றுப் பார்த்துப் பேசிய போது அவள் விழிகள் பேசி மொழி தெரியாமல் நான் வெதும்பி நின்றேன்.
அவளை சிருஸ்டிக்க எனக்கு தெரிந்த இலக்கியத்தை நான் இங்கு படைக்க விரும்புகின்றேன்.ஆனால் அவள் மீது எனக்கேற்பட்ட ஈர்ப்புக்கு அர்த்தமும் தெரியவில்லை உறவும் தெரியவில்லை.அவள் பார்வையின் கனிவு அவள் நடையின் நளினம் அவளை நினைக்கும் போதெல்லாம் அவள் என் எதிரில் நின்ற பேரின்ப அதிர்;ச்சிகள் காலையில் எழுந்ததும் முதலில் எதேச்சையாக அவள் முகத்தில் விழத்ததும் பின்னர் நான் விரும்பி விரும்பி அப்பாவையின் பார்வையுடன் எனது நாட்களை ஆரம்பிக்க முயற்சித்ததும் என்னை தினமும் அதிகாலையிலும் அந்தியிலும் இன்னும் நினைவுறுத்திக் கொண்டேயிருக்கின்றன. காரணம் ஒருவேளை காதலாக இருக்குமோ? எனவும் எண்ணத் தோன்றகின்றது.
இத்தனைக்கும் அவள் நான் இருந்த வாடகை வீட்டில் என்னைப்போல் அவளும் கட்டணம் செலுத்தும் ஓர் அதிதி.மொத்தத்தில் அவள் ஒரு கவிதை.அவள் விழிபார்த்தால் என் வார்த்தைகள் அப்படியே அடங்கின் போகின்றன.
அவளின் சூழ்நிலை பிரிதொரு வாடகை வீடு செல்ல போவதாக அவள் மகிழ்ச்சியுடன் தெரிவித்த கூற்று என்னை ஏகாந்தத்திற்கு இட்டுச் சென்றது.அச்சொல்லையும் அவளின் சற்றே தொலைவான இருப்பையும் என் மணம் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றது.
சிவனுக்கு உரித்தான ராத்திரியன்று அதிகாலை என்னை அவள் தொலைபேசியில் கூப்பிட்ட போது நான் அடைந்த பரவசத்திற்கு வார்த்தைகள் இல்லை விபரிப்பதற்கு.
அவள் போய்விட்டாள் ஆனால் அவள் நினைவுகளும் நிழலும் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கின்றன.அந்நினைவுகளுக்கு என்னால் பதில் சொல்லவும் புரியவில்லை பதிலும் தெரியாது தெரிந்தாலும் சொல்லமாட்டேன்.ஆனால் அவள் நினைவுகள் மட்டும் என்னைச் சுற்றிக்கொண்டேயிருக்கினறன.
Che